சன் டிவியில் நேரடியாக ரிலீசாகும் "புலிக்குட்டி பாண்டி"…கும்கிக்கு பிறகு மீண்டும் இணைந்த ஜோடி!

சென்னை: விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் புலிக்குட்டி பாண்டி.

கொடி வீரன், தேவராட்டம் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.

புத்தாண்டுக்கு வெளிவரவிருந்த புலிக்குட்டி பாண்டி தற்போது நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகஉள்ளது.

இரண்டாம் முறை ஜோடி

இரண்டாம் முறை ஜோடி

விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் ஆகிய இருவரும் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி படத்தில் அறிமுகமாகினர். கும்கி படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதன் பின்னர் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் வெற்றி கூட்டணி இந்த படத்தில் ஜோடி போட்டுள்ளனர்.

3ம் முறை கூட்டணி

3ம் முறை கூட்டணி

நடிகை லக்ஷ்மி மேனன் குறுகிய காலத்தில் பல ரசிகர்களை கவர்ந்தாலும் சில ஆண்டுகளாக பட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். 4 வருடத்திற்கு பின் இயக்குனர் முத்தையாவின் படத்தில் 3வது முறையாக நடிக்க உள்ளார். இதற்கு முன் குட்டி புலி, கொம்பன் ஆகிய முத்தையா படங்களில் நடித்துள்ளார் லக்ஷ்மி மேனன்.

கொரோனா இரண்டாம் அலை

கொரோனா இரண்டாம் அலை

கொரோனா தொற்று காரணமாக சுமார் 200 படங்கள் தமிழில் வெளிவராமல் தவித்து வந்தது. இதையடுத்து திரையரங்குகள் திறக்க பட்டாலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக வெளிவரவிருந்த சில படங்கள் பின் வாங்க தொடங்கியுள்ளது. அந்த லிஸ்டில் தற்போது புலிக்குட்டி பாண்டி திரைப்படமும் இணைந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

புத்தாண்டுக்கு பிறகு வெளிவரவிருந்த புலிக்குட்டி பாண்டி படத்தை பற்றிய எந்த அறிவிப்பும் இது வரை வெளிவரவில்லை. இதையடுத்து இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பொங்கலுக்கு நேரடியாக சன் டிவி, சன் நெக்ஸ்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X