»   »  விஜய்யின் புலியை விரட்டி விரட்டி வேட்டையாடும் வலைஞர்கள்

விஜய்யின் புலியை விரட்டி விரட்டி வேட்டையாடும் வலைஞர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேணும் விட்ரு... அழுதுருவேன் என்று வடிவேலு பாணியில் சொன்னால் கூட விடமாட்டார்கள் போல் இருக்கிறது டுவிட்டர்வாசிகள். புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளதற்கு #PuliMemes போட்டு கலாய்த்து வருகின்றனர் வலைஞர்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


இன்று இணையத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் ரீட்வீட் செய்துவருகிறார்கள். #PuliCountDownSTARTS என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினார்கள்.


புலி படத்தின் டீஸர் நாளை இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது வெளியான சில மணி நேரங்களிலேயே வலைஞர்கள் தங்களின் புலி வேட்டையை ( சேட்டையை) ஆரம்பித்து விட்டனர்.


புலியை காப்பாத்துங்கப்பா

டுவிட்டரில் பலர் வேட்டையாடிக் கொல்வதைப் பார்க்கும் போது இந்த வாசகம் இங்கு தான் அவசியம் தேவைப்படுகிறது... புலியை காப்பாத்துங்கப்பா.


நீ பாட்டுக்கு அடி

புலி கவுண்டவுன் ஸ்டார்ட் என்ற ஹேஸ்டேக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீம்ஸ் போட்டு வரும் பதிவாளர்கள் வடிவேலு படத்தைப் போட்டு கிண்டலடித்துள்ளனர்.


புலிராஜா

புலி படத்தில் ராஜாவாக நடிக்கிறார் விஜய். அதற்காக அணிந்துள்ள ஆடையை கூட விட்டுவைக்கவில்லை வலைஞர்கள்.


உலகமே சிரிக்குதுப்பா

தட் "தமிழ்நாடு இல்ல இந்தியா இல்லை உலகமே உங்கள பார்த்து சிரிக்குதே" மொமென்ட் என்பது ஒருவரின் கமெண்ட்


எங்கள் மீம்ஸ் எங்கள் உரிமை

புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 3 நாட்கள் வைத்து ஓட்டுவோம் என்று கூறியுள்ளார் ஒருவர்.


பவர் ஸ்டார் வந்துட்டாரே

பவர் ஸ்டாரை போட்டு கலாய்த்துள்ளனர் வலைஞர்கள்.. ஐயோ பாவம். விட்ருங்களேப்பா.


அண்ணன் மாஸ்ல

உலக அளவுல ட்ரெண்ட் பண்ணிட்டோம்ல எப்படி என்று கெத்து காட்டுகின்றனர் வலைஞர்கள்.


இதப் பாருங்கப்பா

வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் போஸ்டரைப் போல விஜய் படத்தைப் போட்டுள்ள கலாய்த்துள்ளனர்.


மதச்சண்டை நின்னுப்போச்சுப்ப

போஸ்டர் போட்டதுக்கே மத சண்டையே நின்னுருச்சு. எங்க அண்ணா மட்டும் முதல்வரானால்.. எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளனர்.


English summary
Vijay movie Puli first look release, #PuliMemes is trending at number 1 in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil