»   »  கார் ஒத்திகைக் காட்சி... மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல இயக்குனர்

கார் ஒத்திகைக் காட்சி... மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: புலிமுருகன் படப்பிடிப்பின் ஒத்திகைக் காட்சியின்போது படத்தின் இயக்குநர் வைசாக் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் புலிமுருகன். மோகன்லாலுடன் இணைந்து கமாலினி முகர்ஜி, நமீதா, கிஷோர், ஜெகபதி பாபு மற்றும் பாலா ஆகியோரின் நடிப்பில் புலிமுருகன் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஒத்திகைக் காட்சியின்போது படத்தின் இயக்குநர் வைசாக் மயிரிழையில் உயிர்தப்பியது மலையாள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புலிமுருகன்

புலிமுருகன்

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமீதா, கிஷோர், ஜெகபதி பாபு மற்றும் பாலா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் புலிமுருகன்.இந்தப் படத்தில் புலிமுருகன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.

ஒத்திகைக் காட்சி

ஒத்திகைக் காட்சி

இப்படத்தில் இடம்பெறும் ஒரு கடுமையான சண்டைக் காட்சிக்காக ஒரு காரை வைத்து படக்குழுவினர் ஒத்திகை பார்த்து உள்ளனர். இந்த ஒத்திகைக் காட்சியில் இடம்பெற்ற காரானது படத்தின் இயக்குநர் வைசாக் மீது மோத வந்ததில் மயிரிழையில் உயிர்தப்பி இருக்கிறார் வைசாக்.

Pulimurugan risky car chase rehearsal Video and it was by sheer luck that director Vysakh had a narrow escape

Posted by Pulimurugan on Tuesday, November 17, 2015

பேஸ்புக்கில்

இந்த ஒத்திகைக் காட்சியில் வைசாக் உயிர்தப்பிய வீடியோவை புலிமுருகன் படக்குழுவினர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். படக்குழுவினர் கண்முன்னே நடைபெற்ற இந்த ஒத்திகைக் காட்சியில் காரானது வைசாக் மீது மோத வைசாக் உயிர்தப்பி கீழே விழுகிறார்.

நிஜமான

நிஜமான

படத்தின் ஒத்திகைக் காட்சியின்போது நடந்த இந்தக் கார் துரத்தலும், இயக்குநர் வைசாக் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதும் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவுக்கன்னி நமீதா இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Pulimurugan risky car chase rehearsal Video and it was by sheer luck that director Vysakh had a narrow escape, Facebook Video Link Attached Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil