»   »  மேலும் 2 நடிகைகளை கடத்திய மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் மாஜி கார் டிரைவர்

மேலும் 2 நடிகைகளை கடத்திய மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் மாஜி கார் டிரைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல நடிகையை மானபங்கப்படுத்திய அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனி மேலும் 2 நடிகைகளை கடத்தியது தெரிய வந்துள்ளது.

பிரபல மலையாள நடிகையை அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனி காரில் கடத்தி மானபங்கப்படுத்தினார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டாலும் சுனி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

Pulsar Suni abducts Two more actresses

சுனி பைக்குகளை திருடுவதில் வல்லவராம். அதனால் தான் பல்சர் என்ற அடைமொழியாம். திருட்டுப் பின்னணி இருந்தும் அவரை பிரபலங்கள் வேலைக்கு எடுத்ததற்கு அவரை பற்றி விசாரிக்க நேரம் இல்லாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சுனி அந்த இளம் நடிகை தவிர்த்து மேலும் 2 நடிகைகளை கடத்தியது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.

நடிகைக்கு நடந்த கொடுமையால் மலையாள திரையுலகம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Pulsar Suni who molested popular actress had earlier abducted two more Malayalam actresses.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil