»   »  பாவனாவை கடத்தியதும் பல்சர் சுனி யாருக்கு போன் செய்தார்?: குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

பாவனாவை கடத்தியதும் பல்சர் சுனி யாருக்கு போன் செய்தார்?: குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை பாவனாவை கடத்தியதும் பல்சர் சுனில் குமார் என்கிற பல்சர் சுனி ஒருவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்ததாக இந்த வழக்கில் கைதாகியுள்ள மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

நடிகை பாவனா கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் 2 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு மணிகண்டன் என்பவர் பாலக்காட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

சுனில்

சுனில்

கேரள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் சுனில் குமாருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் கூறும் செயல்களை நான் செய்து முடிப்பேன். அதற்கு அவர், பணம் கொடுப்பார்.

கடத்தல்

கடத்தல்

கடந்த 16ம் தேதி இதுபோல ஒரு வேலை இருப்பதாக கூறினார். மறுநாள் 17ம் தேதி திருச்சூர் வரும்படியும் தெரிவித்தார். என்ன வேலை என்பதை சுனில்குமார் கூறவில்லை. 17ம் தேதி அங்கு போன பின்புதான் நடிகை பாவனாவை கடத்துவதுதான் வேலை என்பதை தெரிந்து கொண்டேன்.

பாவனா

பாவனா

நாங்கள் பாவனாவை கடத்தியதும் சுனில்குமாருக்கு தெரிவித்தோம். அவர், வழியில் காரை நிறுத்தி ஏறிக் கொண்டார். அவர்தான் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரை மிரட்டவும் செய்தார். பாவனா கடத்தப்பட்டதும் சுனில்குமார் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு செல்போனில் பேசியதோடு, குறுந்தகவலும் அனுப்பினார். அந்த நபர் யார்? என்பது எனக்கு தெரியாது.

பணம்

பணம்

நாங்கள் பாவனாவுடன் காரில் சுமார் 2 மணி நேரம் இருந்தோம். இந்த கடத்தல் வேலை முடிந்ததும், நாங்கள் காரில் இருந்து இறங்கி கொண்டோம். மறுநாள் சுனில்குமாரை சந்தித்தோம். ஆனால் அவர், கடத்தலுக் கான பணம் தரவில்லை. மாறாக இந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு சென்றதை தெரிவித்தார்.எனவே நாங்கள் தலைமறைவாகி விட்டோம். ஆனால் போலீசார் என்னை பாலக்காடு பகுதியில் வைத்து பிடித்து விட்டனர் என மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

English summary
Manikandan who is arrested in Bhavana abduction case said that the main accused Pulsar Sunil called somone over phone and informed him about the abduction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil