»   »  பெரிய கோஹ்லி, அனுஷ்கான்னு நெனப்பு: பிக் பாஸ் ஜோடியை கலாய்த்த நெட்டிசன்கள்

பெரிய கோஹ்லி, அனுஷ்கான்னு நெனப்பு: பிக் பாஸ் ஜோடியை கலாய்த்த நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோஹ்லி மாதிரி கணவர் வேண்டும் என்று ஏங்கும் இளம் பெண்கள்- வீடியோ

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதல் ஜோடியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் 11 போட்டியில் கலந்து கொண்டவர்கள் புனீஷ் சர்மா, பந்தகி கல்ரா. காதல் ஜோடியான அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் மீடியாவின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

நெருக்கமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

பந்தகி

பந்தகி

பந்தகி தனது கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது எடுத்த செல்ஃபியை புனீஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

புகைப்படம்

புகைப்படம்

அனுஷ்கா தனது கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது செல்ஃபி எடுத்து வெளியிட்டிருந்தார் விராட் கோஹ்லி. அவர்களை போன்றே புகைப்படம் எடுத்ததால் தான் நெட்டிசன்கள் புனீஷ், பந்தகியை கலாய்த்துள்ளனர்.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லி மாதிரியே அப்படியேவா காப்பியடிப்பீர்கள். வேறு வேலையே இல்லையா புனீஷ் உங்களுக்கு என்று ஆளாளுக்கு அவரை கிண்டல் செய்கிறார்கள்.

பாராட்டு

பாராட்டு

நெட்டிசன்கள் பலரும் புனீஷ், பந்தகியை கலாய்த்துக் கொண்டிருக்க அவர்களின் ரசிகர்களோ காப்பியடித்தால் என்ன நல்லா தானே இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.

காதல்

காதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் புனீஷ், பந்தகி இடையே காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் பிரிந்துவிடுவார்கள் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் இன்னும் ஒன்றாகத் தான் உள்ளனர்.

English summary
Bigg Boss 11's lovebirds, Puneesh Sharma and Bandgi Kalra are still in news even after the reality show got over. The couple is spotted partying together. They are seen constantly sharing their PDA pictures on the social media. Recently, Puneesh Sharma shared a picture in which Bandgi was seen kissing him. This was similar to that of Anushka and Virat's picture. In no time, the couple was trolled by Instagram users. While a few fans supported them saying there is nothing wrong in copying what they like, many of them called them copycats.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X