செம வைரலாகும் புனித் ராஜ்குமாரின் கடைசி வீடியோ, கடைசி ட்வீட்
பெங்களூரு : கன்னட சினிமாவின் பவர்ஸ்டார் என புகழப்படும் புனித் ராஜ்குமார், நேற்று காலை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.
Recommended Video
புனித் ராஜ்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் பரவியதால் அவரது ரசிகர்கள் மருத்துவமனை மற்றும் ராஜ்குமாரின் வீடு முன் கூடி அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருந்தனர். ஏராளமானோர் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.

விஐபி.,க்கள் இரங்கல்
இந்நிலையில் ராஜ்குமார் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ராஜ்குமாரின் ரசிகர்கள், உடன் பணியாற்றிய நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் இரங்கல் தெரிவித்தனர்.

பாதுகாப்பு தீவிரம்
புனித் ராஜ்குமார் உயிரிழந்ததை அடுத்து கர்நாடகா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கர்நாடகா முழுவதும் தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கள், திரைப்பட விழாக்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்குகளை பாதுகாப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரலாகும் கடைசி வீடியோ
இந்நிலையில் புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் கேஜிஎஃப் நடிகர் யாஷுடன் புனித் ராஜ்குமார் மற்றும் அவரின் சகோதரர் ஷிவராஜ்குமார் ஆகியோர் உள்ளனர். ஷிவராஜ்குமாரின் பஜ்ரங்கி 2 படத்தின் விழாவில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

பஜ்ரங்கி 2 டைட்டில் டிராக்
யாஷ், புனித் ராஜ்குமார், ஷிவராஜ்குமார் மூவரும் இணைந்து பஜ்ரங்கி 2 படத்தின் டைட்டில் டிராக்கை வெளியிட்டனர். மூவரும் மேடையில் மேடையில் சிரித்தபடி ஒன்றாக நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

கடைசி ட்வீட்டில் வாழ்த்து
அதே போல், மருத்துவமனை கொண்டு செல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு ட்விட்டரில் புனித் ராஜ்குமார், பஜ்ரங்கி 2 படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்து பதிவிட்டுள்ளார். இந்த படம் நேற்று ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











