»   »  வேதாளம் கன்னட ரீமேக் ரிலீஸ் எப்போது?

வேதாளம் கன்னட ரீமேக் ரிலீஸ் எப்போது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித்தின் பிளாக் பஸ்டர் மூவிகளில் ஒன்றான வேதாளம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார் . படம் இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் ரீலீஸ் செய்யப்பட உள்ளது.

சென்ற ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் என புகழப்பட்ட திரைப்படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் தீபாவளிக்கு திரை கண்ட திரைப்படம் வேதாளம். தமிழ் சினிமா வரலாற்றில், முதல் நாள் வசூலில் புது சாதனை படைத்து ரூ.15.5 கோடியை வசூலித்து அசத்தியது.

Puneeth Rajkumar in Ajith's ‘Vedalam’ remake

100 கோடி ரூபாய் கிளப்பிலும், வேதாளம் சேர்ந்துவிட்டது. சினிமா விமர்சகர்கள், இது வழக்கமான மசாலா கதை என இடித்துரைத்தாலும், மழைக்கு நடுவேயும், ரசிகர்கள் வரவேற்பை பெற்று படம் ஹிட் அடித்தது.

புனித் ராஜ்குமார் கைவசம் தற்போது 2 படங்கள் இருப்பதால், இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகாவின் நகர்ப்பகுதிகளில் வேதாளம் நேரடி தமிழ்படமாகவே பல கன்னட ரசிகர்களால் கண்டுகழிக்கப்பட்டுள்ளது. எனவே ஓராண்டு கழித்து ரீமேக் படத்தை ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று ராஜ்குமாரின் மகனும், படத்தின் ஹீரோவுமான புனித் ராஜ்குமார் கருதுகிறாராம். தனக்குரிய மாஸ் கதாப்பாத்திரத்திற்கு வேதாளம் கதை ஒத்துப்போகும் என்பது புனித்தின் விருப்பத்திற்கு காரணமாம்.

English summary
Tamil blockbuster Vedalam, is all set to be remade in Kannada with Puneeth Rajkumar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil