Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
புனித் ராஜ்குமாரின் கடைசி படம் ‘ஜேம்ஸ்‘…லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
பெங்களுர் : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படமான 'ஜேம்ஸ்' படத்தின் ஸ்பேஷல் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
இந்த படத்தில் புனித் ராஜ்குமாரின் மூத்த சகோதரர்கள் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளனர்.
புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ந் தேதி 'ஜேம்ஸ்' படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.
சர்வானந்த் ஹீரோவாக நடிக்கும் கணம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!

புனித் ராஜ்குமார்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்தது கன்னட திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மக்கள் மனதில் இடம்
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகனாக இருந்ததால் சினிமாவில் நுழைவதற்கு அவர் பெரிய அளவில் மெனக்கெடவில்லை என்றாலும் தன் உழைப்பினாலும் தன் அர்ப்பணிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மிகப்பெரிய நடிகர் என்று அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் அதையும் தாண்டி அவர் செய்த பல நல்ல விஷயங்கள் மக்களிடையே அவருக்கு பெரிய அளவிற்கு மரியாதையையும், அன்பையும் உருவாக்கி வைத்திருந்தது.

ஜேம்ஸ்
இந்நிலையில், புனித்தின் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை குடியரசு தினமான நாளை படக்குழு வெளியிட உள்ளது. ஜேம்ஸ் படம் கன்னட திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள புனித்தின் ரசிகர்கள் அவரை கடைசியாக திரையில்காண காத்திருக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில்
ஜேம்ஸ் திரைப்படத்தில், புனிதத்தின் மூத்த சகோதரர்கள் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆதித்யா மேனன், ஸ்ரீகாந்த் மற்றும் அனு பிரபாகர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். படத்திற்கு சரண் ராஜ் இசையமைத்துள்ளார்.

பிறந்தநாளில் ரிலீஸ்
புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ந் தேதி இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் ஜெம்ஸ் மார்ச் 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால், மார்ச் 17 முதல் மார்ச் 23 வரை மாநிலத்தில் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என கர்நாடகா விநியோகஸ்தர்கள் முடிவு செய்கிறார்கள்.