Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
James Box Office Collection Day 1: கேஜிஎஃப் வசூலை பின்னுக்குத் தள்ளிய புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ்!
பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கர்நாடகாவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், முதல் நாளில் அமோக வசூல் சாதனையை ஜேம்ஸ் படைத்துள்ளது.
கேஜிஎஃப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பின்னுக்குத் தள்ளி கர்நாடகத்தில் முதலிடத்தை பிடித்திருக்கிறது புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம்.
சீனாவில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப்படம்... சிவா ஹாப்பி அண்ணாச்சி!

அப்பு இல்லை
அப்பு என செல்லமாக அழைக்கப்படும் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் 47வது பிறந்தநாள் விழா நேற்று அவர் இல்லாமல் கொண்டாடப்பட்டது. ஆனாலும், ரசிகர்களுக்கு ஜேம்ஸாக திரையரங்குகளில் புனீத் ராஜ்குமார் காட்சியளித்தார். அப்படியே உயிருடன் மீண்டும் வந்து திரைக்கு முன்னால் இருப்பது போலவே புனீத் ராஜ்குமாரை தியேட்டரில் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

4000 காட்சிகள்
ஜேம்ஸ் திரைப்படம் இதுவரை கர்நாடகாவில் வேறு எந்த படங்களும் திரையிடாத அளவிற்கு அதிக திரையரங்குகளில் வெளியானது. கர்நாடகாவில் மட்டும் முதல் நாளில் 2500 காட்சிகள் திரையிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 4000 காட்சிகள் முதல் நாளிலேயே திரையிடப்பட்டன.

முதல் நாள் வசூல்
இந்நிலையில், முதல் நாளில் கர்நாடகாவில் மட்டும் அதிகப்படியாக 27 கோடி ரூபாய் வசூலை புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம் வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதுவரை வெளியான எந்தவொரு கன்னட திரைப்படமும் இந்த அளவுக்கு வசூல் சாதனையை முதல் நாளில் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜிஎஃப் வசூலை முந்தியது
கன்னட திரையுலகை இந்தியளவில் தலைநிமிரச் செய்த நடிகர் யஷ்ஷின் கேஜிஎஃப் திரைப்படம் முதல் நாளில் கர்நாடகாவில் 27 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருந்தது தான் இதுவரை கன்னட திரையுலகில் அதிக வசூல் என கூறப்படுகிறது. இந்நிலையில், கேஜிஎஃப் முதல் பாக வசூலை புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம் முறியடித்து இருக்கிறது. வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவுள்ள கேஜிஎஃப் 2 இந்த வசூல் சாதனையை முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

விமர்சனமில்லா கொண்டாட்டம்
மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செய்யும் விதமாக இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். ஜேம்ஸ் படத்திற்கு எதிராக யாரும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைக்க போவதில்லை என்றும் கூறியுள்ளனர். சேத்தன் குமார் எழுதி இயக்கி உள்ள இந்த படத்தில் பிரியா ஆனந்த், சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். முதல் வாரத்தில் நல்ல வசூல் வேட்டையை ஜேம்ஸ் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.