»   »  பீட்சா, பிரியாணி, ஜிகர்தண்டா.. அடுத்து புண்ணாக்கு "சாப்பிடலாம்" வாங்க!

பீட்சா, பிரியாணி, ஜிகர்தண்டா.. அடுத்து புண்ணாக்கு "சாப்பிடலாம்" வாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்ப எல்லாம் சினிமா படத்திற்கு பெயர் வைக்க மெனக்கெட்டு யாரும் யோசிப்பதில்லை போல..... பழைய ஹிட் படத்தின் பெயரை வைப்பது ஒரு புறம் இருக்க பீட்சா, பிரியாணி, ஜிகர்தண்டா என்று உணவுப் பொருளின் பெயரை வைத்து அந்த படங்களையும் மக்களை பார்க்க வைத்தார்கள்.

இல்லையா மிக நீளமாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்று பெயர் வைத்து டெரர். இப்போதோ புண்ணாக்கு என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்து சில தினங்களுக்கு முன்னர் பூஜை போட்டுள்ளனர். கலைப்புலி தாணு சிறப்பு விருந்தினராக இந்த படத்தின் பூஜையில் பங்கேற்றார்.

[படங்கள்]

நாயகன் நாயகி

நாயகன் நாயகி

புண்ணாக்கு பட நாயகன், நாயகி யார் என்றே தெரியாத அளவிற்கு ஒரே நட்சத்திர பட்டாளமாக காணப்பட்டது பட பூஜையில். ஒரு ஹீரோவிற்கு 5 ஹீரோயினா? என்று கேள்வி எழுப்பலாம் போல தோன்றியது.

பரிவட்டம் கட்டி

பரிவட்டம் கட்டி

பட பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. பொன்னாடையும் போர்த்தப்பட்டது.

கலர்ஃபுல் நாயகி

கலர்ஃபுல் நாயகி

நாயகி இவரா? அவரா என்று சந்தேகத்தை கிளப்பும் அளவிற்கு மாடர்ன் டிரஸ் மங்கையர்களும், புடவை அணிந்த பெண்ணும் பூஜையில் பங்கேற்றனர்.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

வாணி ராணி சீரியலில் நடித்த ஒரே ஒரு முகத்தை தவிர மற்ற எல்லாமே புண்ணாக்கு படத்தில் புதுமுகங்களாகவே காணப்படுகின்றனர்.

எப்படி சொல்வாங்க

எப்படி சொல்வாங்க

இந்த வாரம் என்ன படம் ரிலீஸ்னு கேட்டா புண்ணாக்கு ரிலீஸ்ன்னு சொல்லுங்களோ? எப்படியோப்பா பணம் போட்டு படம் எடுக்கிறவங்க என்ன பேரு வச்சா என்ன?

English summary
Punnaku Tamil Movie Launch on May 3 in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil