»   »  விவேகம் தியேட்டர்களை தன் வசமாக்கிய விஜய் சேதுபதியின் புரியாத புதிர்..! #PuriyaathaPuthir

விவேகம் தியேட்டர்களை தன் வசமாக்கிய விஜய் சேதுபதியின் புரியாத புதிர்..! #PuriyaathaPuthir

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்ஸ் ஆபீஸ் நம்பிக்கை நாயகன் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள விஜய் சேதுபதியின் அடுத்த படம் புரியாத புதிர். இந்த வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளதால் கணிசமான அரங்குகளில் படம் வெளியாகிறது.

இதற்கு முன் வெளியான விஜய் சேதுபதி படம் விக்ரம் வேதா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இன்னும் கூட பல அரங்குகளில் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.


Puriyaatha Puthir releases in 300 screens

இந்த வெற்றி தந்த பாஸிடிவ் தாக்கத்தை சரியாகப் பயன்படுத்தி, புரியாத புதிரை வெளியிடுகிறார் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார். சென்னையில் மட்டும் 20-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியாகிறது.


தமிழகம் முழுவதும் 300 அரங்குகளில் புரியாத புதிர் வெளியாகிறது. கடந்த வாரம் விவேகம் படம் பெரும்பாலான அரங்குகளை ஆக்கிரமித்தது. இப்போது அந்த அரங்குகளில் பாதிக்கு மேல் புரியாத புதிருக்குக் கிடைத்திருக்கிறது.

English summary
Vijay Sethupathy's Puriyaatha Puthir movie is releasing in 300 plus screens across the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil