»   »  புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்... சிருஷ்டிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பாடகர் கிரிஷ்!

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்... சிருஷ்டிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பாடகர் கிரிஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ், அடுத்து நாயகனாக களத்தில் குதித்துள்ளார்.

‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' படத்தில் அவர் சிருஷ்டி டாங்கேக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

Puriyatha Aanandham Puthithaga Aarambam

பல வெற்றிப் படங்களைத் தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹைனா சேகர் இசையமைக்கிறார். செந்தில்மாறன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி தம்பி செய்யது இப்ராஹீம் இயக்குகிறார். இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும் அதில் சில விஷயங்களைச் சொல்லத் தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.

Puriyatha Aanandham Puthithaga Aarambam

இந்த படத்திற்கான காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டன. கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட பாடல்தான்.

படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார்.

English summary
Singer Krish is debuting as hero through a movie titled Puriyatha Aanandham Puthithaga Aarambam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil