முடியலடா சாமி.. புஷ்பா 2 பாட்டுன்னு கொட்டாவி விட வச்சிட்டாரே டிஎஸ்பி.. படம் தப்பிக்குமா?
சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான " சூடான தீ" பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். முதல் பாடலான புஷ்பா புஷ்பா பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில், "சாமி சாமி" பாடலுக்கு இணையான பாடலாக இந்த பாடல் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக கவரவில்லை.
ஆந்திராவில் செம்மரக்கடத்தல் தொழிலை செய்து கேங்ஸ்டர் ஆன நபரின் கதையை மையப்படுத்தி புஷ்பா திரைப்படம் உருவானது. முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.

புஷ்பா 2 திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் சீட்டு அடிக்குமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
யாரும் வாங்கல: புஷ்பா 2 படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா தியேட்டர் உரிமையை வினியோகஸ்தர்கள் வாங்குவதற்கு தயங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தியேட்டர் விற்பனையையும் அதிகப்படுத்த வேண்டும் என படக்குழுவினர் கூறி வரும் நிலையில், தியேட்டர் பிசினஸ் இந்த ஆண்டு முன்பு போல இல்லை என வினியோகஸ்தர்கள் தெரிவித்து வருவதாக கூறுகின்றனர். புஷ்பா 2 திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டுமா என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.
செகண்ட் சிங்கிள்: புஷ்பா 2 படத்தின் முதல் பாடலான புஷ்பா புஷ்பா பாடல் வெளியாகி 100 மில்லியன் வியூஸை கடந்துள்ளது. ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த ஷூ ஸ்டெப்புக்கு ரீல்ஸ் போட்டனர். நடிகை மீனாவும் அந்த ஸ்டெப்புக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடனமாடிய "சூடான தீ" பாடல் தற்போது வெளியானது. லிரிக் வீடியோவே புரியாத அளவுக்கு மேக்கிங் உள்ள நிலையில், ரசிகர்களை கவரவில்லை.
ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி காட்டல: புஷ்பா படத்தில் வெறும் பாவாடையுடனும், சேலையின் மாராப்பை மூடாமல் ஜாக்கெட்டுடன் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா இந்த பாடலில் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் காண்டாகி விட்டனர்.
தூங்க வைத்த டிஎஸ்பி: தேவி ஸ்ரீ பிரசாத் மெலோடி பாடல் போட்டாலும் நல்ல பீட் போட்டு ரசிகர்களை ஆட வைத்து விடுவார். ஆனால், புஷ்பா 2 செகண்ட் சிங்கிள் பாடலில் அவர் இசையமைத்துள்ள மியூசிக் மற்றும் ஸ்ரேயா கோஷல் குரல் ரசிகர்களை தாலாட்டு பாடி தூங்க வைப்பது போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
படம் தப்பிக்குமா?: புஷ்பா 2 படத்துக்கு ஒரேயடியாக பில்டப் மட்டுமே செய்து வரும் நிலையில், படம் தப்பிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜூன் 27ம் தேதி வெளியாகவுள்ள பிரபாஸின் கல்கி படம் வசூல் வேட்டை நடத்தினால் தான் புஷ்பா 2 படமும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் என்பதை உறுதி செய்ய முடியும் என்கின்றனர். "ஓ சொல்றியா மாமா" அளவுக்கு ஒரு குத்தாட்ட பாடலை டிஎஸ்பி இறக்கினால் தான் படத்தின் ஹைப் எகிறும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











