ரூ.400 கோடி டீலை மறுத்த புஷ்பா படக்குழு...ஏன்னு காரணம் தெரியுமா ?
ஐதராபாத் : பிரபல நிறுவனம் பேசிய ரூ.400 கோடி டீலை ஏற்க புஷ்பா படக்குழு மறுத்து விட்டதாம். இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், புஷ்பா படக்குழுவின் செயலை பாராட்டியும் வருகின்றனர்.
டைரக்டர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் புஷ்பா : தி ரைஸ். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் சேஷாச்சலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தல்காரர்களின் வாழ்க்கை பற்றியதாகும்.

3 மொழிகளில் ரூ.350 கோடி வசூல்
ரூ.200 முதல் ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், இந்தி என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று ரூ.350 கோடி வரை வசூலித்து, வசூல் சாதனை படைத்தது. பாடல்களும் செம ஹிட் ஆனது.

விரைவில் புஷ்பா 2 ரிலீஸ்
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 2022ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பான் இந்தியன் படமான இது தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தையும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

400 கோடி டீல் பேசிய நிறுவனம்
லேட்டஸ்ட் தகவலின் படி முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று, மைத்ரி மூவி மேக்கர்சை தொடர்பு கொண்டு, புஷ்பா 2 படத்தின் தியேட்டர் உரிமத்தை ரூ.400 கோடிக்கு தங்களிடம் விற்கும்படி கேட்டுள்ளது. இந்த தொகை தெலுங்கு தியேட்டர் உரிமத்திற்கு மட்டும் இல்லையாம். அனைத்து மொழிகளிலும், இந்திய மார்கெட் முழுவதற்கும் தியேட்டர் உரிமத்தை கேட்டுள்ளனர்.

நோ சொல்ல இதுதான் காரணமா
ஆனால் புஷ்பா படக்குழுவினர் இந்த டீலை ஏற்க மறுத்து விட்டார்களாம். புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் ரிலீசிற்கு பிறகு அல்லு அர்ஜுன் பான் இந்தியன் நடிகராகி விட்டார். அடுத்து இந்தியில் வெளியாக உள்ள அல்லு அர்ஜுனின் ஆல வைகுண்டபுரமுலூ படமும் மாஸை கிளப்பி உள்ளது. அதனால் நிச்சயம் புஷ்பா 2 படம், அவர்கள் பேசிய டீல் தொகையான ரூ.400 கோடிக்கு மேல் வசூலிக்கும் என நம்பிக்கை உள்ளதாக புஷ்பா படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

டைரக்டர்ன்னா இப்படி இருக்கனும்
டைரக்டர் சுகுமார் மிக கச்சிதமாக புஷ்பா படத்தை எடுத்துள்ளார். படத்தை பிரம்மாண்ட வெற்றி பெற செய்வதற்காக எந்த லெவலுக்கும் போய் அவர் உழைத்திருக்கிறார். அதனால் அந்த உழைப்பிற்கு நிச்சயம் மக்கள் பலன் தருவார்கள். புஷ்பா 2 விற்கு மக்கள் தரும் ஆதரவை வேறு எந்த கம்பெனியும் தந்து விட முடியாது என படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.

அடுத்த ஹிட் லோடிங்கா
புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதனால் ஓ சொல்றியா மாமா, சாமி சாமி பாடல்களை மிஞ்சும் அளவிற்கு புஷ்பா 2 பாடல்கள் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். படக்குழுவினரின் இந்த நம்பிக்கையான பேச்சால் ரசிகர்களுக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications