ரிலீசுக்கு தயார்... யு/ஏ சான்றிதழ் பெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா
ஐதராபாத் : டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி இசையமைத்துள்ள இந்த படத்தில் சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், ஃபகத் ஃபாசில், தனஞ்செயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாஸ் ஆக்ஷன் பொழுதுபோக்கு படமான புஷ்பா படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை சந்திரபோஸ் எழுதி உள்ளார்.

இதுதான் கதையா
ஆந்திராவின் ஷேசாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்துவோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது தான் புஷ்பா படம். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

சமந்தாவின் குத்து பாடல்
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புஷ்பா படத்தில் நடிகை சமந்தா அயிட்டம் சாங் ஒன்றிற்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். சமந்தா படுகவர்ச்சியாக நடனம் ஆடி உள்ள இந்த பாடல், ஃபஸ்ட் சிங்கிளாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

டிசம்பர் 17 ரிலீஸ்
புஷ்பா படம் டிசம்பர் 17 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி டிசம்பர் 12 ம் தேதியான நாளை ஐதராபாத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட உள்ளது.

யு/ஏ சான்று
இந்நிலையில் புஷ்பா படம் சமீபத்தில் சென்சார் போர்டின் பார்வைக்காக அனுப்பப்பட்டு, சென்சார் போர்டின் அனுமதியையும் புஷ்பா படம் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி டிசம்பர் 17 ம் தேதி படம் ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

படத்தின் நேரம்
புஷ்பா படம் மொத்தமாக 176 நிமிடங்கள் ஓடக் கூடியதாம். சுகுமாரின் முந்தைய படமான ரங்கஸ்தலம் படமும் 176 நிமிடங்களைக் கொண்டது தான். ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்திற்கு ராம், லட்சுமணன், பீட்டர் ஹெயின்ஸ் ஆகியோர் ஸ்டண்ட் அமைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











