ராவா ரணகளப்படுத்தும் புஷ்பா டீஸர்... அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் களைகட்டும் இணையதளம்!

ஹைதராபாத் :அலா வைகுண்டபுரம்லோ என்ற மாஸான பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படம் புஷ்பா

புஷ்பா படத்தைப் பற்றிய எக்கச்சக்கமான சுவாரசியமான விஷயங்கள் அவ்வப்போது வெளியாகி வர இதில் வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ள புஷ்பா திரைப்படத்தின் ராவான டீஸர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு தற்பொழுது வெளியிடப்பட்டு இணையதளத்தை ரணகளமாக்கி வருகிறது.

200 கோடிக்கும்

200 கோடிக்கும்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தெலுங்கு ரசிகர்களால் எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவிற்கு இவரின் திரைப்படங்கள் வெற்றி நடைபோட்டு பல வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் சென்ற ஆண்டு வெளியான அலா வைகுண்டபுரம்லோ உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ரங்கஸ்தளம் இயக்குனர் சுகுமார்

ரங்கஸ்தளம் இயக்குனர் சுகுமார்

இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்ட நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படங்களில் முதன்மை இடத்தை பெற்றது. இவ்வாறு மாஸான வெற்றியைக் கொடுத்த அல்லு அர்ஜுன் அடுத்து எந்த இயக்குனருடன் இணைந்து பணியாற்ற போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ரங்கஸ்தளம் இயக்குனர் சுகுமார் உடன் தற்பொழுது கைகோர்த்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக

பான் இந்தியா திரைப்படமாக

எப்பொழுதும் ராவான படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வரும் சுகுமாரன் அடுத்து இயக்கும் புஷ்பா திரைப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை கண்டிராத அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் ராவான லுக்கில் நடித்திருக்கிறார். தெலுங்கு,தமிழ், மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.

Recommended Video

Mahesh Babu Vs Allu Arjun | Pushpa, Sarkaru Vaari Paata | Tollywood Breaking
ஆக்ஷன் சற்று தூக்கலாகவே

ஆக்ஷன் சற்று தூக்கலாகவே

வெறும் போஸ்டருக்கே திரையுலகம் அதிர்ந்து போயிருந்த நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு தற்பொழுது புஷ்பா டீஸர் வெளியாகி இணையதளத்தை மிரட்டி வருகிறது.
டீஸர் தொடங்கியது முதலே ஆக்ஷன் காட்சிகள் தொற்றிக்கொள்ள சாரை சாரையாக செல்லும் ஒரு லாரிகள், காடுகள் மற்றும் கத்தை கத்தையாக செம்மரக்கடத்தல் என ஒருபுறம் அமர்க்களப்படுத்தி இருக்க மறுபுறம் அல்லு அர்ஜுனின் வழக்கமான ஆக்ஷன் காட்சிகள் சற்று தூக்கலாகவே தூள் கிளப்பி உள்ளது . குறிப்பாக முகத்தை முழுவதுமாக மூடி கைகள் பின்னால் கட்டப்பட்ட பிறகும் பறந்து பறந்து அல்லு அர்ஜுன் செய்யும் மிரட்டும் சண்டைக்காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்க டீஸர் வெளியான சில நிமிடங்களிலேயே 20 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X