»   »  சூப்பர்ஸ்டார்கள் அஜீத், சூர்யாவுடன் போட்டோ எடுத்தேனே: பி.வி. சிந்து மகிழ்ச்சி

சூப்பர்ஸ்டார்கள் அஜீத், சூர்யாவுடன் போட்டோ எடுத்தேனே: பி.வி. சிந்து மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பி. வி. சிந்து சூர்யா, அஜித் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் வைரல் ஆகின்றன.

சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அஜீத் மற்றும் சூர்யா குடும்பத்தாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார் பி.வி. சிந்து.

ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை தோற்கடித்தார்.

இதிலும் வெற்றி

இதிலும் வெற்றி

பி.பி.எல். போட்டிகளில் சிந்து சுமீத் ரெட்டியுடன் சேர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் உலக அளவில் சிறந்து விளங்கும் கமிலா மற்றும் லீயை தோற்கடித்தார்.

சிந்து

அஜீத், ஷாலினி மற்றும் அவர்களின் மகள் அனோஷ்காவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பி.வி. சிந்து.

ஜோதிகா

சூர்யா, ஜோதிகா, அவர்களின் மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் சிந்துவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். சூப்பர்ஸ்டார்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக ட்வீட்டியுள்ளார் சிந்து.

மகிழ்ச்சி

பி.வி. சிந்து அஜீத் மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

English summary
Badminton player P. V. Sindhu has taken pictures with Ajith, Shalini, Suriya and Jyothika when she came to Chennai to participate in the PBL. She has shared the pictures on twitter and instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X