»   »  கிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்? வருகிறது ஒரு புதுப்படம்!

கிருஷ்ணாவை கிரகணம் பிடிச்சா என்ன ஆகும்? வருகிறது ஒரு புதுப்படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரிசையாக நான்கு புதுப்படங்களுக்கு அடுத்தடுத்து பூஜை போட்டுள்ளது பிவிபி நிறுவனம். இப்போது லேட்டஸ்டாக அந்த நிறுவனம் பூஜை போட்டுள்ள படம் கிரகணம்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் இந்தப் படத்தின் நாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார்.

புதுமுகம் நந்தினி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். கருணாஸ், கருணாகரன் 'கயல்' சந்திரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

PVP Cinema's next Grahanam

படம் குறித்து இளன் கூறுகையில், ‘கிரகணம்' கோள்களின் இடமாற்றம் என்று சிலரும், ஒவ்வொரு மனிதனின் நல்லதும், கேட்டதும் இதை மையாமாகக் கொண்டே அமைகிறது என்று சிலரும் நம்புவதுண்டு. அந்த வகையில் சந்திர கிரகணத்தால் சிலரது வாழ்க்கையில் ஏற்படும் நல்லது கெட்டதை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் முயற்சிதான் ‘கிரகணம்'. பிவிபி சினிமா தயாரிப்பில் என்னுடைய முதல் படத்தி இயக்குவதில் மிக சந்தோஷமாக உள்ளது. படபிடிப்பு மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது," என்றார்.

PVP Cinema's next Grahanam

முழுக்க முழுக்க இளைஞகர்களை கொண்டுள்ளது 'கிரகணம்' படக் குழு. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். சுந்தர மூர்த்தி இசையமைக்கிறார்.

இன்று ஏவிஎம்மில் நடந்த படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் பாபி சிம்ஹா, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜ், சிவா, தனஞ்செயன், சிவி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
PVP Cinema, The production house that surprises one and all with their variety of films are the talk of the town at present.With their intentions of making films of different genre PVP Cinema announce their next project titled 'Grahanam' .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil