»   »  இந்தியாவின் காஸ்ட்லி படம் 2.ஓ... மல்டிப்ளெக்ஸ் பார்ட்னர் ஆனது பிவிஆர்!

இந்தியாவின் காஸ்ட்லி படம் 2.ஓ... மல்டிப்ளெக்ஸ் பார்ட்னர் ஆனது பிவிஆர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரூ 450 கோடியில் இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் 2.ஓ, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

24x7 என்ற வேகத்தில் விஎஃப்எக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் இந்தப் படத்துக்காக உழைத்து வருகிறார்கள்.

PVR joins as Multiplex Partner of Rajini's 2.O

ரஜினிகாந்த் ஏற்கெனவே படத்துக்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

உலக அளவில் 10 ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். லைகா நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் தியேட்டர் நெட்வொர்க் பலமாக இருப்பதால் இது சாத்தியம் என்கிறார்கள். இப்படி நடந்தால், உலக அளவில் இவ்வளவு அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமை 2.ஓவுக்குத்தான்.

இப்போது முதல் டீலாக, இந்தியாவில் 2.ஓ படத்தின் மல்டிப்ளெக்ஸ் பார்ட்னராக, நாட்டின் பெரிய தியேட்டர் நெட்வொர்க்கான பிவிஆர் இணைந்துள்ளது.

இந்தியாவில் 121 நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நடத்தி வருகிறது பிவிஆர் சினிமாஸ்.

English summary
India’s largest multiplex chain ‘PVR Cinemas’ has signed as the multiplex partner for the country’s costliest film ‘2.O’ starring Superstar Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil