Don't Miss!
- Automobiles
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- News
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யுவன் தயாரிப்பில் ஹரிஷ், ரைசா நடிக்கும் படம் - ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீஸ்!

சென்னை : கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்களில் முக்கியமானவர்கள் ஹரிஷ் கல்யானும், ரைசாவும். இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் முன்பே வெளியானது.
பாதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷும், தொடக்கத்திலிருந்தே பிக்பாஸில் பங்குபெற்ற ரைசாவும் இணைந்து நடிக்கும் படத்திற்கு தற்போது 'பியார் பிரேமா காதல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இளன் இயக்கும் இந்தப் படத்தை கே.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். அவரே இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.
|
பியார் பிரேமா காதல்
ஹரிஷ் கல்யாண் - ரைசா நடிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் போஸ்ரை யுவன் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
|
ஹீரோயின் ரைசா
'பியார் பிரேமா காதல்' படத்திற்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்கிறார். ரைசா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. இதற்கு முன் நாயகியின் தோழியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் 'சிந்து சமவெளி', 'பொறியாளன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் யுவன்
இந்தப் படம் பற்றி யுவன், 'ஒரு படத்தை தயாரிக்கும்போது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி, நல்ல கதை, நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள், முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தயாரிப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது.'

திறமைகளை உலகிற்கு காட்டவேண்டும்
வெளிவராத திறமைகளை வெளிக்கொண்டு வந்து, உலகிற்கு காண்பிப்பதே எனது மற்றும் கே.புரொடக்ஷன் ராஜா ராஜன் அவர்களின் நோக்கம். என படத்தைத் தயாரிப்பது பற்றி யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.