»   »  ரைசா, ஹரிஷின் காதலர் தின ஸ்பெஷல்... 'பியார் பிரேம காதல்' சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

ரைசா, ஹரிஷின் காதலர் தின ஸ்பெஷல்... 'பியார் பிரேம காதல்' சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'பியார் பிரேம காதல்'.

பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷும், ரைசாவும் நாயகன், நாயகியாக நடித்துவரும் இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.

'பியார் பிரேம காதல்' படத்தின் சிங்கிள் ட்ராக் காதலர் தினத்தை முன்னிட்டு சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

இளன் இயக்கும் 'பியார் பிரேம காதல்' படத்தை கே.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். அவரே இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின.

ஹீரோயின் ரைசா

ஹீரோயின் ரைசா

ரைசா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. இதற்கு முன் நாயகியின் தோழியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் 'சிந்து சமவெளி', 'பொறியாளன்' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மோஷன் போஸ்டர்

'பியார் பிரேம காதல்' படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த மோஷன் போஸ்டரில் ஹரிஷும் ரைசாவும் ஹெட்போனில் பாடல் கேட்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

சிங்கிள் ட்ராக்

சிங்கிள் ட்ராக்

'பியார் பிரேம காதல்' மோஷன் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 13-ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

High on love

High on love

இந்நிலையில், இப்படத்தின் High on love என்ற பாடல் சற்று முன்பு வெளியாகியுள்ளது. காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் இப்பாடல் மேற்கத்திய இசை பாணியில் அமைந்த மெலடி பாடல். யுவனின் இசையில் தெறிக்கும் இந்தப் பாடல் ட்ரெண்டாகி வருகிறது.

காதல் பாடல்

காதல் பாடல்

பெண்ணை பார்த்து காதல் வயப்பட்ட ஹீரோ தன் காதலியை வர்ணிக்கும் வார்த்தைகளால் நிரஞ்சன் பாரதி எழுதியிருக்கிறார். 'மறுவார்த்தை பேசாதே' பாடல் மூலம் ரசிகர்களின் மனம்கவர்ந்த சித் ஸ்ரீராம் தான் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

English summary
Harish kalyan and Raiza are playing lead roles in 'Pyaar Prema kaadhal' movie. Yuvan Shankar Raja is producing this film. The single track of 'Pyaar Prema kaadhal' by yuvan's music was released shortly before Valentine's Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil