»   »  அமெரிக்காவிலும் பிரமீட் சாய்மீரா!

அமெரிக்காவிலும் பிரமீட் சாய்மீரா!

Subscribe to Oneindia Tamil

இந்தியத் திரையுலகில் குறிப்பாக தென்னிந்தியாவில் வலுவாக காலூண்றியுள்ள பிரமீட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம், தற்போது அமெரிக்காவிலும் கால் பதித்துள்ளது. டெக்சாஸைச் சேர்ந்த பன் ஏசியா (Fun Asia) நிறுவனத்தை அது விலைக்கு வாங்கி விட்டதாம்.

தென்னிந்திய திரையுலகில், பட விநியோகம், திரையீடு, தயாரிப்பு என பல ரூபங்களிலும் புதிய சக்தியாக பிரமீட் உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலும் கால் பதித்துள்ளது பிரமீட்.

டெக்ஸாசைச் சேர்ந்த பன் ஏசியா நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து பிரமீட் விலைக்கு வாங்கியுள்ளது. பிரமீட் சாய்மீரா தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க உப நிறுவனமான பிரமீட் சாய்மீரா என்டர்டெய்ன்மென்ட் அமெரிக்கா மூலம் இந்த வியாபாரப் பரிவர்த்தனை நடந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த எலாரா கேபிடல் நிறுவனம் இந்த பரிவர்த்தனையில் ஆலோசகராக செயல்பட்டுள்ளது.

பன் ஏசியா நிறுவனம் தொடங்கி 9 ஆண்டுகள் ஆகிறது. ஹூஸ்டனில் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக 11 தியேட்டர்கள் உள்ளன. டல்லாஸில் 6 தியேட்டர்கள் உள்ளன. இதுதவிர ஒரு ரேடியோ ஸ்டேஷன், 3 மாநாட்டு அரங்குகளை இது வைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய தியேட்டர் குழுமம் பன் ஏசியா என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமீட் சாய்மீரா நிறுவன நிர்வாக இயக்குநர் பி.எஸ்.சாமிநாதன் இதுகுறித்துக் கூறுகையில், இந்தி மற்றும் தென்னிந்திய திரைப்படங்களுக்கு அமெரிக்காவும், கனடாவும் மிகப் பெரிய சந்தைகளாக உள்ளன.

அமெரிக்காவில் தியேட்டர்களின் எண்ணிக்கையை 60 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். மேலும் 15 நகரங்களுக்கு இந்தக் குழுமத்தை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது என்றார்.

இதுதவிர உணவு மற்றும் பான விற்பனையையும் அதிகரிக்க பிரமீட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos