Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமன்னாவோடு மோதல்... படத்திலிருந்து விலகிய டைரக்டர்!?
Recommended Video
சென்னை : விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து 2014-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்த படம் 'குயின்'.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டிலும் சுமார் 50 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
நான்கு மொழிகளில்
தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களை தெலுங்கு இயக்குனர் நீலகண்டா இயக்குகிறார். தமிழ், கன்னட மொழிப் படங்களை நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.
தெலுங்கில் நாயகி தமன்னா
தெலுங்கில் தமன்னா கதாநாயகியாகவும், கன்னடத்தில் பருல் யாதவ், தமிழில் காஜல் அகர்வால், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகியாக கங்கனா ரனாவத் நடித்த வேடத்தில் நடிக்கிறார்கள்.
தமன்னாவுடன் பிரச்னை
இதனிடையே, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களை இயக்கி வந்த நீலகண்டா, தெலுங்கு மொழிப் படத்தை இயக்குவதை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமன்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தொடர்ந்து இயக்க முடியாது என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தமன்னா மறுப்பு
இந்த விவகாரம் டோலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால், தமன்னா, தனக்கும் இயக்குனருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக படக்குழுவினர் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.