twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘’குயின்’’ஜெயலலிதாவின் கதை இல்லை… கௌதம் மேனன் விளக்கம்

    |

    சென்னை: குயின் ஜெயலலிதாவை பற்றிய கதையல்ல " தி குயின் " என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் என்று கௌதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

    இவ்வலை தொடரை எடுக்க நினைக்கும் போது முதலில் எங்களுக்கு நினைவில் வந்தவர் ரம்யா கிருஷ்ணன் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

     Queen web series there is no story of Jayalalithaa

    எப்போதும் வெற்றிப்படங்களே கொடுக்கும் கௌதம் வாசுதேவ மேனன் அவர்கள் இப்போது ஒரு வெப்சிரீஸ் எடுத்து வருவது எல்லாருக்கும் தெரியும். போஸ்டர், ட்ரைலர்னு எல்லாத்தையும் பார்த்துட்டு இது ஜெயலலிதாவோட வாழ்க்கை வரலாறு தொடர்னு பேசப்பட்டது.

    ஆனால், இந்த வெப்சீரீஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கௌதம் மேனன், இது, ஜெயலலிதா அவர்களின் கதையல்ல என்றும், அனிதா சிவக்குமரன் எழுதிய " தி குயின் " என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் தான் என்றும் கூறினார்.

     Queen web series there is no story of Jayalalithaa

    கௌதமுக்கு பட வாய்ப்பு இல்லை, அதனால் இப்படி வெப்சீரீஸ் எடுக்க கிளம்பிட்டாருனு சொன்னாங்க, ஆனால் அது அப்படி அல்ல, இப்போ உலகமே இதனை நோக்கி தான் ஓடி கொண்டு இருக்கிறது. ஆகையால் இது போன்ற தொடர்களை இயக்குவதில் மிகவும் மன மகிழ்ச்சி என்று கூறினார்.

    இந்த வெப்சீரீஸ் எடுக்க நினைத்ததும் முதலில் நினைவில் வந்தவர் ரம்யா கிருஷ்ணன் தான். தொடர் முழுவதும் அவரை அவராகவே நடிக்க சொல்லி இருக்கிறேன் என்று கௌதம் கூறினார். 11 பாகங்களாக வரும் இந்த தொடர் வரும் 14ந் தேதி வெளிவர உள்ளது. இதில் அனிகா, இந்திரஜித் போன்றோர் நடித்துள்ளனர்.

    English summary
    Queen web series there is no story of Jayalalithaa
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X