twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெபோடிசம், முட்டாள்தனமான வாதம்.. திறமையில்லைனா யாருமே நிற்க முடியாது.. தனுஷ் பட இயக்குனர் ஆவேசம்!

    By
    |

    சென்னை: நெபோடிசம் என்பது முட்டாள்தனமான வாதம் என்று தனுஷ் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

    பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுவதாக மிரட்டல்.. ஸ்கிரீன்ஷாட்டுடன் பிரபல நடிகை பரபரப்பு புகார்! பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுவதாக மிரட்டல்.. ஸ்கிரீன்ஷாட்டுடன் பிரபல நடிகை பரபரப்பு புகார்!

    ரியா சக்கரவர்த்தி

    ரியா சக்கரவர்த்தி

    மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காதலி ரியா சக்கரவர்த்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உட்பட பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சுஷாந்துடன் நடித்தவர்கள் என விசாரணை நடத்தியுள்ளனர்.

    வாரிசு நடிகர்கள்

    வாரிசு நடிகர்கள்

    சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில், நெபோடிசம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைதளங்களுக்கே சென்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்களை கடுமையாக விளாசினர்.

    இயக்குனர் ஆர்.பால்கி

    இயக்குனர் ஆர்.பால்கி

    இதனால் சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள இயக்குனர் ஆர்.பால்கி, இது முட்டாள்தனமான வாதம் என்று தெரிவித்துள்ளார். இவர் அமிதாப்பச்சன் நடித்த சீனி கம், பா, தனுஷ், அமிதாப்பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடித்த ஷமிதாப், அக்‌ஷய்குமார் நடித்த பேட்மேன் உட்பட சில இந்திப் படங்களை இயக்கிய தமிழர்!

    முட்டாள்தனமான வாதம்

    முட்டாள்தனமான வாதம்

    அவர் கூறும்போது, இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மகேந்திராக்கள், அம்பானிகள், பஜாஜ்கள் பற்றி யோசியுங்கள். அவர்கள் தந்தை தொடங்கிய பிசினசை மகன்கள் தொடர்கிறார்கள். ஒரு டிரைவர், காய்கறி விற்பவர் கூட தங்களுக்கு அடுத்து தங்கள் தொழிலை தங்கள் வாரிசுகளிடம் கொடுக்கிறார்கள். சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது இருக்கிறது. இந்நிலையில் சினிமாவில் நெபோடிசம் என்பது முட்டாள்தனமான வாதம்.

    நியாயமில்லாதது

    நியாயமில்லாதது

    நாம், சுதந்திரமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆலியா பட், ரன்பீர் கபூரை விட சிறந்த நடிகர், நடிகையை கண்டுபிடியுங்க பார்க்கலாம் என்று நாங்கள் கேட்போம். வாதிடுவோம். இதுபோன்ற சிறந்த நடிகர்களை அப்படி சொல்வது நியாயமற்றது. சினிமா வாரிசுகள் இல்லாமல் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    திறமையால் மட்டுமே முடியும்

    திறமையால் மட்டுமே முடியும்

    ஆனால், திறமையானவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கிறது. திறமையில்லாதவர்களை ரசிகர்கள் பார்க்க விரும்புவதில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் வாரிசு நடிகர், நடிகைகளை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், முதல் படத்தில் மட்டுமே. பின்பு அவர் தங்கள் திறமையால்தான் வளர முடியும். இவ்வாறு கூறியுள்ளார். இவர் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Read more about: balki பால்கி
    English summary
    Filmmaker R Balki feels nepotism should not be mixed with talent, also points out that the audience won’t accept anyone who isn’t skilled.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X