twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: அஜித் சார் மீதான ‘காதலை’ வெளிப்படுத்த ரூ.6 கோடி செலவு செய்தேன் : ஆர்.கே.சுரேஷ்

    பில்லா பாண்டி படத்தில் நாயகனாக நடித்துள்ளார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.

    |

    Recommended Video

    அஜித் சார் மீதான காதலை பற்றி இயக்குனரான ஆர்.கே.சுரேஷ் பேட்டி

    சென்னை: பில்லா பாண்டி படத்தில் அஜித்தின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்.

    பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். தயாரிப்பாளராக இருந்து நடிக்க வந்திருக்கும் இவர் கையில் தற்போது ஒரு டசன் படங்கள் இருக்கின்றன.

    பில்லா பாண்டி ரிலீஸ் வேலைகள், மற்ற படங்களின் நடிப்பு வேலைகள், இயக்குனராக அவதாரம் எடுப்பதற்காக முன்னேற்பாடுகள் என பிஸியாக இருக்கும் ஆர்.கே.சுரேஷை சந்தித்தோம்.

    நம்மிடம் அவர் பேசியதிலிருந்து,

    தீபாவளி ரிலீஸ்:

    தீபாவளி ரிலீஸ்:

    பில்லா பாண்டி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம். அன்று சர்கார் திரைப்படமும் வெளியாகிறது. இதனால் தியேட்டர் எந்தளவுக்கு கிடைக்கும் என தெரியவில்லை. இந்த படத்தில் தம்பி ராமையா, இந்துஜா என நிறைய பேர் நடித்துள்ளனர்.

    அஜித் ரசிகன்:

    அஜித் ரசிகன்:

    அஜித் ரசிகர்களை இந்த படம் நிச்சயம் நூறு சதவிகிதம் திருப்திபடுத்தும். அஜித் சாரை குலதெய்வம் போல் காட்டி இருக்கிறோம். அடிப்படையில் நான் ஒரு தீவிர அஜித் ரசிகன். காதல் கோட்டை, வாலி படங்களின் போதிருந்தே அவருக்கு ரசிகனாகிவிட்டேன்.

    காதல் கோட்டை காதல்:

    காதல் கோட்டை காதல்:

    அதனால் தான் பில்லா பாண்டி படத்தில் ஒரு வசனம் வைத்திருக்கிறேன். படத்தில் எனது மாமனார் ரசிகர் மன்றத்தை கலைத்தால் தான் பொண்ணு தருவேன் என சொல்வார். அதற்கு நான், ‘இது இன்னைக்கு நேத்து வந்த காதல் இல்ல. காதல் கோட்டையில இருந்து வந்தது' என பதில் சொல்வேன். அந்த அளவுக்கு அஜித் சாரை காதலிக்கும் ஒருவனாக நான் நடித்திருக்கிறேன்.

    6 கோடி செலவு:

    6 கோடி செலவு:

    அஜித் சார் தனி மனித வழிபாட்டை விரும்பாதவர் தான். ஆனால் நாங்கள் அவரை கடவுளாக தான் பார்க்கிறோம். அவரே வேண்டாம் என்று சொன்னாலும், அவரை நாங்கள் விரும்பத்தான் செய்வோம். சாமியா வந்து தனக்கு கோயில் கட்டு என்று சொன்னது. நாம் தானே கோயில் கட்டுகிறோம். அதுபோல் தான் இதுவும். அஜித் சார் மீதான காதலை வெளிபடுத்த ரூ.6 கோடி செலவு செய்து இந்த படத்தை எடுத்துள்ளேன்.

    அஜித் கோட்டை:

    அஜித் கோட்டை:

    படம் நடப்பது ராஜபாளையம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில். உண்மையில் அந்த கிராமம் முழுவதுமே அஜித் ரசிகர்கள் தான். அந்த கிராமத்தின் பெயரையே அஜித் கோட்டை என மாற்றிவிட்டனர். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. தல என்று சொன்னதுமே கத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஒருவழியாக மக்களை சமாளித்து படம் எடுத்தோம்.

    ஏழு படங்கள்:

    ஏழு படங்கள்:

    அடுத்தடுத்து நிறைய படங்கள் செய்துகொண்டிருக்கிறேன். வேட்டை நாய், முகம் என ஏழு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மதுர ராஜா உள்பட மலையாளத்தில் மூன்று படங்கள் செய்கிறேன். காசி மாயனும் கிடா சண்டையும் படத்தில் நானும் சீமான் சாரும் சேர்ந்து நடிக்கிறோம். டைசன்னு ஒரு படம் நான் ஹீரோவாக நடிக்கிறேன். அட்டு பட இயக்குனர் ராஜரத்தினம் இந்த படத்தை இயக்குகிறார். இது பெரிய பட்ஜெட் படம். தண்ணி வண்டின்னு ஒரு படம் நான் இயக்குகிறேன்.

    மெட்ராஸில் ஒரு மெஸ்ஸி:

    மெட்ராஸில் ஒரு மெஸ்ஸி:

    யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். 'மெட்ராஸில் ஒரு மெஸ்சி'னு படத்துக்கு தலைப்பு வெச்சுருக்கோம். வித்தியாசமான படமாக இது இருக்கும்.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    பெரும்பாலும் ஹீரோவாக தான் நடிக்கிறேன். பெரிய ஹீரோ படம் என்றால் வில்லனாக நடிக்கலாம் என முடிவு செய்துள்ளேன். மராத்தி மொழியிலும் ஒரு படம் செய்கிறேன். காது கேளாத, வாய் பேச முடியாத நபராக இந்த படத்தில் நடிக்கிறேன். இந்த படம் நிச்சயம் பல விருதுகளை வாங்கும்" என நம்பிக்கையுடன் விடைபெறுகிறார் ஆர்.கே.சுரேஷ்.

    English summary
    Producer and actor R.K.Suresh is very much excited about his upcoming movie Billa Pandi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X