»   »  மகனை வைத்து ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யும் பாண்டியராஜன்!

மகனை வைத்து ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்யும் பாண்டியராஜன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடிப் படங்களில் ஒன்று பாண்டியராஜனின் ஆண்பாவம்.

விகே ராமசாமி, ரேவதி, சீதா, பாண்டியன், பாண்டியராஜன் நடிப்பில், இளையராஜா இசையில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படம், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

R Pandiyaraja to remake Aan Paavam

இப்போது தொலைக்காட்சியில் ஒலிபரப்பினாலும் மக்கள் ஒரு காட்சியைக் கூட அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்கிறார்கள்.

இந்தப் படத்தை மீண்டும் ரீமேக் செய்ய வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் கூட தனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அப்படியெல்லாம் யாரையும் ரீமேக் பண்ண அனுமதிக்கும் எண்ணமில்லை, படத்தை உருவாக்கிய பாண்டியராஜனுக்கு.

தன் மகன் ப்ருத்வியை வைத்தே இந்தப் படத்தை ரீமேக் பண்ணப் போகிறார். இதற்கான அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பு ஆண்பாவம் 99%.

R Pandiyaraja to remake Aan Paavam

ஆண்பாவம் படத்தை இன்றைய ட்ரென்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இயக்கப் போகிறாராம். இதில் பாண்டியராஜன் பாத்திரத்தில் பிரிதிவிராஜன் நடிக்கிறார்.

வஜ்ரம் படத்தைத் தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தை ஆர்.சங்கர் தயாரிக்கிறார். மற்ற பாத்திரங்களுக்கு தேர்வு நடக்கிறது.

கேரளாவிலுள்ள ஒத்தப்பாலத்தில் விரைவில் ஆண்பாவம் 99 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

English summary
R Pandiyarajan, the maker of 80's classic Aan Paavam is announced the remake of the movie with his son Prithvirajan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil