twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "முதல்ல சினிமாவ காப்பாத்துங்க.. அப்புறம் அரசியலுக்கு போகலாம்".. ரஜினி, கமலை சீண்டிய பிரபல இயக்குனர்

    ரஜினியை சீண்டும் வகையில் பட விழாவில் பேசி இருக்கிறார் ஆர்.வி.உதயகுமார்.

    |

    Recommended Video

    RV UdhayaKumar Speech at Evanum Puthan Illai Audio launch

    சென்னை: நடிகர் ரஜினியை சீண்டும் வகையிலான கருத்துகளை தெரிவித்துள்ளார் பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்.

    வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாத்துவதை விட முதலில் தங்களை வளர்த்த சினிமாவை காப்பாற்ற வர வேண்டும் என்றார்.

    தீர்வு கிடைக்கவில்லை

    தீர்வு கிடைக்கவில்லை

    இதுகுறித்து அவர் பேசியதாவது, "முதலாவதாக இந்தப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இந்த உலகில் எவனும் புத்தனில்லை. சந்தர்ப்பம் கிடைக்காத வரை எல்லாரும் நல்லவர்கள் தான். வாய்ப்பு கிடைக்காத வரை நாம் அனைவரும் புத்தனாக இருக்கலாம். நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது.

    முதலில் சினிமா

    முதலில் சினிமா

    சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று வருபவர்கள் கூட திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம்.

    வருமானம் வரும்

    வருமானம் வரும்

    இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒண்ணா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும். தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபட தயாரிப்பாளருக்கு வருமானம் வரும்.

    பிளவு

    பிளவு

    தமிழ்சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது.

    ரஜினியின் எளிமை

    ரஜினியின் எளிமை

    ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் வருவார்.

    வெற்றி பெறும்

    வெற்றி பெறும்

    இப்படத்தில் சினேகன் பிறந்தபலனை அடைந்து விட்டார். அவர் பதினைந்து பெண்கள் மத்தியில் மிதக்கிறதைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த பங்ஷன் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல் படமும் வெற்றிபெறும்" என்றார்

    Read more about: rajini ரஜினி
    English summary
    While speaking in the audio launch of Evanum Budhanillai movie, director R.V.Udayakumar insisted big actors should come forward to save tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X