»   »  'வாணி ராணி'யின் 52 வது பிறந்ததினம் இன்று

'வாணி ராணி'யின் 52 வது பிறந்ததினம் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகாவின் 52 வது பிறந்த தினம் இன்று, தமிழில் நடிகையாக கிழக்கே போகும் ரயில் மூலம் பாஞ்சாலியாக தனது திரையுலக வாழ்வைத் துவங்கிய ராதிகா கிட்டத்தட்ட 37 வருடங்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அதிகமான எண்ணிக்கையில் படங்களில் நடித்திருக்கிறார். சினிமா தவிர்த்து சீரியல் உலகிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் ராதிகா.

1999 ம் ஆண்டில் சித்தியில் தொடங்கிய ராதிகாவின் பயணம் 2013 ம் ஆண்டு தொடங்கிய வாணி - ராணியில் வந்து நிற்கிறது. சீரியல் உலகில் சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வருகிறார் ராதிகா.

ராதிகாவின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய ஒருசில தகவல்களை காணலாம்.

கிழக்கே போகும் ரயில்

கிழக்கே போகும் ரயில்

1978 ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த ராதிகா இந்த 37 ஆண்டுகளில் சுமார் 200 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார்.

சிவாஜி தொடங்கி சத்யராஜ் வரை

சிவாஜி தொடங்கி சத்யராஜ் வரை

நடிகையாக நடிகர்திலகம் சிவாஜி தொடங்கி வில்லன் நடிகர் சத்யராஜ் வரை பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார் ராதிகா. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், மோகன் என்று பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் ராதிகா இணைந்து நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

நல்ல அம்மாவும் கூட

நல்ல அம்மாவும் கூட

ஒரு கட்டத்திற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களை ஏற்று நடித்த ராதிகா அதிலும் தனது நடிப்பு முத்திரையை அழுத்தமாகவே பதித்திருந்தார். பூ மகள் ஊர்வலம், ரோஜாக் கூட்டம், சென்னையில் ஒரு நாள், கண்ணா மூச்சி ஏனடா போன்ற படங்கள் ராதிகாவின் நடிப்பிற்கு சாட்சியாக இன்றளவும் திகழ்கின்றன.

சின்னத்திரையின் ராணி

சின்னத்திரையின் ராணி

1999 ம் ஆண்டு சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் காலடி பதித்தவர், தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, செல்லமே, அரசி என்று வரிசையாக நாடகங்கள் தயாரித்து அதில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வாணி ராணி

வாணி ராணி

தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி தொடர் தமிழ்நாட்டுத் தாய்மார்களின் விருப்பமான நாடகமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஜித்தன் படம் மூலம் தயாரிப்பாளராக மாறிய ராதிகா சரத்குமார் தற்போது படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த மாரி, இது என்ன மாயம் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது பாம்பு சட்டை திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

வாழ்நாள் சாதனையாளர் விருது

திரையுலகத்திற்கு ராதிகா ஆற்றிய கலைச்சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து ராதிகாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்து கவுரவித்தனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராதிகாவை தட்ஸ்தமிழ் சார்பாக நாமும் வாழ்த்துவோம்...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராதிகா மேடம்...

English summary
Raadhika Sarathkumar Today Celebrating Her 52nd Birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil