»   »  சூரியனையே தூக்கி சாப்பிடப் பார்த்த ராய் லட்சுமி: போட்டோ எடுத்தது யார் தெரியுமோ?

சூரியனையே தூக்கி சாப்பிடப் பார்த்த ராய் லட்சுமி: போட்டோ எடுத்தது யார் தெரியுமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராய் லட்சுமியை நடிகர் மம்மூட்டி வித்தியாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

மம்மூட்டி தற்போது நடித்து வரும் மலையாள படம் குட்டநாடு பிளாக். சேது இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. காமெடி படமான இதில் ராய் லட்சுமி, பூர்ணா என்று இரண்டு ஹீரோயின்கள்.

படம் கேரள மாநிலத்தில் உள்ள குட்டநாடை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

புகைப்படம்

புகைப்படம்

மம்மூட்டிக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம். படப்பிடிப்பு தளத்தில் சக கலைஞர்களை புகைப்படம் எடுக்கிறார். அப்படி அவர் ராய் லட்சுமியையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

வைரல் புகைப்படம்

ராய் லட்சுமி மாலை நேர சூரியனை தன் வாயில் வைத்திருப்பது போன்று வித்தியாசமாக புகைப்படம் எடுத்துள்ளார் மம்மூட்டி. ராய் லட்சுமி அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

ராய் லட்சுமியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மம்மூட்டி உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ராய் லட்சுமி அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்

தமிழ்

ராய் லட்சுமி தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள படத்திலும் ராய் லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

English summary
Mammootty has taken a beautiful picture of his Oru Kuttanadan Blog co-star Raai Lakshmi. Raai Lakshmi has posted that picture on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X