»   »  'ஜூலி 2' ப்ரொமோஷன் - லக்‌ஷ்மி ராய் போட்டோவைப் பார்த்தீங்களா...

'ஜூலி 2' ப்ரொமோஷன் - லக்‌ஷ்மி ராய் போட்டோவைப் பார்த்தீங்களா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : 'கைதி நம்பர் 150' படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் கெட்ட ஆட்டம் போட்ட ராய் லக்‌ஷ்மி அடுத்து பாலிவுட் பக்கம் பயணித்தார்.

'ஜூலி 2' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ராய் லக்‌ஷ்மி தனது முதல் படத்திலேயே பாலிவுட் திரையுலகைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அதற்காகவே 'ஜூலி 2' படத்தில் கவர்ச்சியில் எக்ஸ்ட்ரா லார்ஜ் தாராளம் காட்டியுள்ளார். இந்தப் படத்தை பாலிவுட் ரசிகர்கள் தாண்டிப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஜூலி 2 :

ஜூலி 2 :

ராய் லக்‌ஷ்மி படு கவர்ச்சியாக நடிக்கும் 'ஜூலி 2' படத்திற்கு கத்தரி எதுவுமின்றி சென்சார் போர்டில் 'A' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் விநியோகஸ்தர் பஹ்லஜ் நிகலனி முன்னாள் சென்சார் போர்டு தலைவர் ஆவார்.

ட்ரெய்லரே ஆத்தாடீ... :

ட்ரெய்லரே ஆத்தாடீ... :

அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் லக்‌ஷ்மி ராயைப் பார்த்தே ரசிகர்கள் பலர் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ப்ரொமோஷனல் வேலை :

ப்ரொமோஷனல் வேலை :

படம் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு. சும்மாவே ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான படங்களைப் பதிவேற்றும் ராய் லக்‌ஷ்மிக்கு இப்போது சொல்லவா வேண்டும்?

கவர்ச்சிப் புயல் :

கவர்ச்சிப் புயல் :

படத்தின் ப்ரொமோஷனுக்காக போல்ட், பியூட்டிஃபுல், ப்ளெஸ்ட் என மூன்று விதமான படங்களை வெளியிடுகிறார். அவற்றில் Bold புகைப்படம் வெளியாகி இருக்கிறது. ராய் லக்‌ஷ்மி மேலாடையின்றி இருப்பது போலவும், உடலெங்கும் பெயின்ட்டினால் எழுதப்பட்டிருப்பது போலவும் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

English summary
The 'Julie 2' film has got 'A' certificate on the sensor board without any cut. Raai Laxmi is releasing three different hot pictures for the film's promotion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil