»   »  ராஜமௌலியின் அடுத்த ஹீரோ ரஜினியா... ரன்வீரா?

ராஜமௌலியின் அடுத்த ஹீரோ ரஜினியா... ரன்வீரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ராஜமௌலி இந்திய சினிமாவில் உச்ச இயக்குநர் ஆகிவிட்டார். பாகுபலி 1, 2-ன் வரலாறு காணாத வெற்றிகள் அவரை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.

ஆனால் மனிதர் அமைதியாக தன் அடுத்த படத்துக்கான திட்டமிடலில் உள்ளார். அவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஏங்கி தவிக்கிறார்கள்.

Raajamouli's next with Ranveer?

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்தான் அவர் படம் பண்ணுவார் என்ற பேச்சு நிலவி வரும் வேளையில், ராஜமௌலியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளி வர ஆரம்பித்துள்ளன.

பாகுபலிக்கு பிறகு ராஜமௌலி இயக்கப் போவது 'ஃபேன்டசி' படமாக இருக்குமாம். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சிங்குடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. ரன்வீரின் 'துரு துரு' நடிப்பு ராஜமௌலியை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம்.

இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகிறது. ரன்வீரும் ராஜமௌலியுடன் இணைந்து பணிபுரிவதால் ஆர்வமாக உள்ளாராம்.

அப்ப ரஜினி - ராஜமௌலி புராஜெக்ட்?

English summary
Sources say that Raajamouli is planning to make another fantasy movie with Ranveer Singh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil