விக்ரம் ஆன் தி வே...இன்று தரமான சம்பவம் காத்திருக்கு...ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அறிவிப்பு

சென்னை : கமலின் விக்ரம் படம் பற்றிய மிக முக்கியமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதனால் அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வேற லெவல் ப்ரமோஷன்

வேற லெவல் ப்ரமோஷன்

ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும், ப்ரொமோஷன் வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. ரயில் மூலம் ப்ரொமோஷனை துவக்கியவர்கள், படத்தின் ஆடியோ வெளியீட்டு ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலரை பிரான்சில் மே 18 ம் தேதி நடைபெற உள்ள கென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அட இவர் வேற இருக்காரா

அட இவர் வேற இருக்காரா


இதற்கிடையில் புதிய அப்டேட்டாக, கமல் இளமை தோற்றத்தில் நடிக்கும் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவட்சவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே இவர் வரும் காட்சிகள் இருந்தாலும் மிக முக்கியமான அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கமலுக்கு மட்டும் தான் பிளாஷ்பேக் காட்சிகள் என்றால், இதில் விஜய் சேதுபதி கேரக்டரும் வருகிறதாம்.

இன்று முக்கிய அறிவிப்பு

இன்று முக்கிய அறிவிப்பு

விக்ரம் படம் பற்றி தினம் தினம் வெளியாகும் தகவல்கள் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மிக பெரிய, முக்கியமான அறிவிப்பு ஒன்று விக்ரம் பற்றி வெளியிடப்பட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் இது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர்.

என்ன அறிவிப்பா இருக்கும்

என்ன அறிவிப்பா இருக்கும்

ஆடியோ வெளியீட்டு தேதி, ஃபர்ஸ்ட் சிங்கிள் இவற்றில் ஏதாவது ஒன்றின் அறிவிப்பாக தான் இருக்கும் என சோஷியல் மீடியாவில் பேச்சு அடிபடுகிறது. ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டிற்கான அறிவிப்பாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இன்று மாலை தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X