»   »  கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா விஷால் ஹீரோயின்?: உண்மை என்ன?

கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா விஷால் ஹீரோயின்?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா?..விஷால் ஹீரோயின்!- வீடியோ

சென்னை: கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வெளியான தகவல்கள் குறித்து நடிகை ராசி கன்னா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை, கிரிக்கெட் வீரரை காதலிப்பது என்பது புதிது அல்ல. விராட் கோஹ்லி நடிகை அனுஷ்காவை மணந்தார், ஜகீர் கான் நடிகை சகாரிகா கட்கேவை திருமணம் செய்தார்.

ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை எலி அவ்ரமை காதலிக்கிறார்.

பும்ரா

பும்ரா

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ராசி கன்னாவும், கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் காதலிப்பதாக கடந்த 2 மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரசிகை

ரசிகை

கிரிக்கெட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணி விளையாடும் ஒரு போட்டியைக் கூட மிஸ் பண்ண மாட்டேன். பும்ராவின் பவுலிங்கிற்கு நான் ரசிகை. அவர் விளையாடுவதை பார்க்கவே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பேன் என்று ராசி முன்பு தெரிவித்திருந்தார். மேலும் பும்ராவை பாராட்டி சமூக வலைதளங்களிலும் போஸ்ட் போட்டார்.

கிசுகிசு

கிசுகிசு

பும்ரா இந்திய அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் என்று தெரியும். அவ்வளவு தான். தனிப்பட்ட முறையில் அவரை தெரியாது. அவரை நான் சந்தித்தது இல்லை. எங்களுக்குள் காதல் இல்லை என்று தற்போது தெரிவித்துள்ளார் ராசி கன்னா.

டெம்பர்

டெம்பர்

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி ஹிட்டான டெம்பர் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கன்னா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Raashi Khanna has rubbished the rumours that she is dating cricketer Jaspreet Bumrah. She added, she knows that Bumrah is a cricketer and that's it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X