twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாரையும் பார்க்காம, திடீர்னு அவ்வளவு பேரை பார்த்ததும் பயந்துட்டேன்.. பிரபல ஹீரோயின் அதிர்ச்சி!

    By
    |

    சென்னை: இந்த தீபாவளி கொரோனா கால கஷ்டங்களை அனைவருக்கும் மாற்றும் என்று பிரபல ஹீரோயின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

    இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை ராஷி கண்ணா.

    இதில், நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்பட பலர் நடித்திருந்தனர்.

    மெட்ராஸ் கபே

    மெட்ராஸ் கபே

    அடுத்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களில் நடித்தார் ராஷி கண்ணா. இந்தியில் ஜான் ஆப்ரஹாமின் மெட்ராஸ் கபே என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷி, பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். அங்கு முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

    துக்ளக் தர்பார்

    துக்ளக் தர்பார்

    கடைசியாக, விஜய தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது தமிழில், அர்ஜூன், ஜீவா நடிக்கும் மேதாவி, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், சுந்தர்.சியின் அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்காக சென்னையில் இருக்கும் ராஷி கண்ணா, இந்த தீபாவளி பற்றிப் பேசினார்.

    கொண்டாட முடியாத

    கொண்டாட முடியாத

    ஒவ்வொரு தீபாவளியையும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம். குடும்பத்துடன் கொண்டாட முடியாத முதல் தீபாவளியாக இது அமைந்திருக்கிறது. இந்த தீபாவளிக்கு சென்னையில் படப்பிடிப்பில் இருப்பதால் குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லை. அதோடு கொரோனா காலத்தில் ரிஸ்க்குடன் செல்ல விரும்பவில்லை. என் பெற்றோரின் பாதுகாப்பும் முக்கியம்.

    மாற்றும் விதமாக

    மாற்றும் விதமாக

    அதனால் வீடியோ காலில் தீபாவளியை அவர்களுடன் கொண்டாட போகிறேன். இந்தகொரோனா காலம் அனைவருக்கும் கடினமாக அமைந்துவிட்டது. இந்த தீபாவளி அதை மாற்றும் விதமாக அன்பையும் ஒளியையும் மகிழ்ச்சியையும் எல்லோருக்கும் கொடுக்கும் என நம்புகிறேன்.

    கேமரா முன்னால்

    கேமரா முன்னால்

    மூன்று தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறேன். இதற்காக சென்னையில் அடுத்த மாதம்வரை இருக்கிறேன். கொரோனா காலத்தில் என் பெற்றோரை தவிர யாரையும் சந்திக்காமல் இருந்தேன். திடீரென ஷூட்டிங்கில் அதிகமானவர்களைக் கண்டதும் முதலில் பயந்தேன். கேமரா முன்னால் நின்றதும் என் பயம் போய்விட்டது. இவ்வாறு கூறியுள்ளார் ராஷி கண்ணா.

    English summary
    Raashi Khanna says, I hope this Diwali will bring love, light and happiness into people’s lives once again'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X