Just In
- 13 min ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 30 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 57 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடித்தது லக்.. விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் சீரிஸ்.. ஹீரோயினாக ஒப்பந்தமான பிரபல நடிகை!
சென்னை: ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடிக்கும் வெப்சீரிஸில், மற்றொரு ஹீரோயினாக பிரபல நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் சேதுபதி, தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த ஹீரோயினுக்கு அப்படி ரெக்கமண்ட் பண்றாராமே இந்த ஹீரோ.. அவசரமாக பரவும் அப்படி இப்படி பேச்சு!
தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் இப்போது நடித்துள்ளார்.

லால் சிங் சத்தா
ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்னை காரணமாக சமீபத்தில் விலகினார். இதைப் படக்குழு உறுதிப்படுத்தியது. இப்போது மாமனிதன், ஜனநாதனின் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், தீபக் சுந்தர்ராஜனின் அனபெல் சுப்ரமணியம் படங்களில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் ஹீரோ
துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மலையாளத்தில் ஒரு படம் என நடித்து வரும் அவர், அடுத்து வெப் சிரீஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அமேசான் பிரைம் இந்த வெப் தொடரைத் தயாரிக்கிறது. இந்த தொடரில் அவர் பாலிவுட் ஹீரோ ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார்.

'மாஸ்டர்' ஹீரோயின்
மற்றொரு முக்கிய கேரக்டரில் 'மாஸ்டர்' ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தொடர் மூலம் விஜய் சேதுபதி வெப் சிரீஸில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர்.

த ஃபேமிலி மேன்
த ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய இவர்கள், இப்போது த ஃபேமிலி மேன் தொடரின் அடுத்த பாகத்தை உருவாக்கி உள்ளனர். அதில் நடிகை சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

ராசி கண்ணா
ஷாகித், விஜய் சேதுபதி இருவருமே இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிப்பதாகவும் இந்த கேரக்டர்கள் புதிதாக இருக்கும் என்றும் இந்த வெப்சீரிஸ் குழு கூறியுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் ஹீரோயினாக நடிகை ராசி கண்ணா நடிக்கிறார். அவர் ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.