ரச்சிதா ஏமாற்றி விட்டார்..அழுது புலம்பிய ராபர்ட் மாஸ்டர்

ரச்சிதா தன்னை ஏமாற்றி விட்டதாக ராபர்ட் மாஸ்டர் அழுது புலம்ப ஹவுஸ்மேட்ஸ் அவரை சமாதானப்படுத்தினர்.

பிக்பாஸில் இந்த வார ராஜா ராணி டாஸ்கில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும் ராணியாக ரச்சிதாவின் நடித்தனர்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் ராபர்ட் மாஸ்டர். பாகுபலி ஸ்டைலில் ரச்சிதாவை அணைத்து வில் அம்பை விடும் வித்தையை காட்டினார்.

 கலவையான எண்ணங்களில் கலந்து விளையாடும் பிக்பாஸ் வீடு

கலவையான எண்ணங்களில் கலந்து விளையாடும் பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் வீடு பல சுவாரசியமான விஷயங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு புறம் அசீம் போன்றவர்கள் மோசமாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்து கொண்டாலும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நட்பை பேணுவதும் தங்களுக்குள் சுவாரசியமாக விஷயங்களை பகிர்ந்து கொள்வதிலும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஜனனி தனியாக கடலை போட்டுக் கொண்டிருக்கின்றார். இதில் அமுதவாணனுக்கு விக்ரமன் மீது ஒரு கோபம் இருந்து கொண்டே இருப்பதை பார்க்கலாம்.

 ராஜாவாகி ராணி ரச்சிதாவை நேசிக்க ஆரம்பித்த ராபர்ட் மாஸ்டர்

ராஜாவாகி ராணி ரச்சிதாவை நேசிக்க ஆரம்பித்த ராபர்ட் மாஸ்டர்

இந்த வாரம் டாஸ்கில் ராஜா, ராணி டாஸ்கில் ராஜா, ராணி, இளவரசன், இளவரசி தளபதி ராஜகுரு இவர்களுக்கு சேவை செய்ய, அருங்காட்சியகத்தை பாதுகாக்க ஒரு குழுவும், சமையல் மற்ற வேலைகளுக்காக ஒரு குழுவினர் என டாஸ்க் களைகட்டியது. இந்த டாஸ்க்கில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர் தேர்வு செய்யப்பட்டவுடன் ராணியாக ரட்சிதா தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே ரச்சிதா பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு இது ரொம்ப வசதியாக போனது. ரட்சிதா எங்க போனாலும் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டு அவர் பின்னால் திரிந்து கொண்டிருந்தவருக்கு, ராஜாவாகி ராணியை ஒரு குழு இவர் கூடவே இருக்கும் நிலை ஏற்பட்டதால் கிட்டத்தட்ட ராஜாவாகவே ஆகி ராணியை நேசிக்க ஆரம்பித்து விட்டார்.

 ரச்சிதாவிற்காக கோபப்பட்ட ராபர்ட் மாஸ்டர்

ரச்சிதாவிற்காக கோபப்பட்ட ராபர்ட் மாஸ்டர்

ஒரு நாள் மதியம் ராணி ரச்சிதாவிற்கு சோற்றில் உப்பை போட்டு ஷிவின் கொடுத்துவிட கொந்தளித்து போய்விட்டார் ராஜா. உண்மையான ராஜா கூட ராணிக்காக இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டார் அந்த அளவிற்கு கோபப்பட்டார். இடையில் ரச்சிதா சிறுநீர் கேட்க அந்த வார்த்தையின் அர்த்தம் கூட அவர் மண்டையில் உறைக்காத அளவிற்கு கோபத்துடன் இருந்தார் ராபர்ட் மாஸ்டர். அன்று காலையில் தான் ராணியை பாகுபலி பிரபா ஸ்டைலில் பின்பக்கம் இருந்து அம்பு விட கற்றுக் கொடுத்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தார்.

 ராணியுடனே சுற்றிக்கொண்டு இருந்த ராபர்ட் மாஸ்டர்

ராணியுடனே சுற்றிக்கொண்டு இருந்த ராபர்ட் மாஸ்டர்

தொடர்ச்சியாக ராஜாவாகவே மாறிய அவர் ராணி ரச்சிதாவை தன்னுடனே அழைத்துக் கொண்டு சுற்றுவது, சாப்பாடு சாப்பிடுவதும், ஆலோசனை கேட்பதும் என சுற்றிக் கொண்டிருந்தார். முதல் ஒரு நாள் ரச்சிதா இதை பொறுத்துக் கொண்டார் இரண்டாம் நாள் கடுப்பான அவர் ராஜா அழைத்த பொழுது இப்போ கூடாவா நடிக்கணும் என்று எரிச்சல் பட்டப்படி சென்றதை காண முடிந்தது. இதற்கிடையே பிக் பாஸ் வைத்த டாஸ்கில் படைத்தளபதியும், மகாராணியும் சேர்ந்து சேவகன் கதிரவனை பயன்படுத்தி கஜானாவில் உள்ள பொருட்களை திருட வேண்டும். இது யாருக்கும் தெரியாது. இந்த டாஸ்க் பொருட்களை திருடுவதில் கதிரவனும் அசீமும் செய்த அளப்பறையால் அருங்காட்சியக குழு கதறியது.

 ராபர்ட்டை நீக்குங்கள் ராஜகுருவு விக்ரமனுக்கு அதிகாரம் கொடுத்த பிக்பாஸ்

ராபர்ட்டை நீக்குங்கள் ராஜகுருவு விக்ரமனுக்கு அதிகாரம் கொடுத்த பிக்பாஸ்

இந்நிலையில் இன்று காலை ராஜகுருவை கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ் நாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவிட்டது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது இதற்கு காரணம் ராஜாவின் செயல்படும் தன்மை என்று கூறி ராஜாவை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய ராஜாவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ராஜகுருவுக்கு ஒப்படைத்தார். ராஜகுரு வந்து ராஜாவை தேர்வு செய்வதற்காக ராபர்ட் மாஸ்டரை நீக்கிவிட்டு புதிதாகவே தேர்வு செய்ய பிக்பாஸ் கட்டளை இட்டதை சொன்னார். இதை அடுத்து புதிய ராஜாவாக ரச்சிதா தேர்வு செய்யப்பட்டார். ராஜா ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்.

 சாதாரண டாஸ்க்கில் வெளியேற்றப்பட்டதற்கு கோபித்துக்கொண்ட மாஸ்டர்

சாதாரண டாஸ்க்கில் வெளியேற்றப்பட்டதற்கு கோபித்துக்கொண்ட மாஸ்டர்

சாதாரண ஒரு விளையாட்டில் தான் வெளியேற்றப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத ராபர்ட் மாஸ்டர் அழுதபடி கார்டன் ஏரியாவுக்கு சென்றார். அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் சமாதானமானதாக தெரியவில்லை. ராணி ரச்சிதா மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தேன். இந்த டாஸ்க் விஷயத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார் என்று அழுதபடி கூறிக் கொண்டிருந்தார். அழுது புலம்பியபடி இருந்தார். அவருக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ் இது ஒரு விளையாட்டு டாஸ்க், இதில் அவர்களுக்கு ரகசியமாக கொடுக்கப்பட்டதை உங்களிடம் எப்படி சொல்வார்கள் என்று கேட்ட பொழுது சும்மா ஒரு சைகையாவது காட்டி இருக்கலாமே என்று அப்பாவியாக சொல்லி கண்ணை கசக்கி கொண்டிருந்தார் ராபர்ட் மாஸ்டர்.

 ரச்சிதாவிடம் கோபித்துக்கொண்டு அழுத ராபர்ட் மாஸ்டர்

ரச்சிதாவிடம் கோபித்துக்கொண்டு அழுத ராபர்ட் மாஸ்டர்

தன்னுடைய ராஜா கனவு கலைந்து தனியான விடப்பட்ட நிலையில் அதை தாங்க முடியாமல் மூட் அவுட் ஆன நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே அசீம், ராபர்ட் மாஸ்டர் மன வருத்தத்தில் இருக்கிறார் அவரை வந்து சந்தித்து ஆறுதல் கூறுங்கள் என்று ரச்சிதாவிடம் சொல்ல அவர் மறுத்துவிட்டார். ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவே வாழ்ந்ததால் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என ஏடிகே சொன்னார். ஆனால் டாஸ்க்கை தாண்டி ரச்சிதாவிடம் இவர் நெருக்கம் காட்ட முயன்றதும், ரச்சிதாவிற்கு கொடுத்த டாஸ்க்கை தன்னிடம் சொல்லவில்லை என கோபித்துக்கொண்டு கண்ணீர் விட்டதெல்லாம் ரொம்ப ஓவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X