சாப்பிட மாட்டேன்..அடம்பிடித்த ராபர்ட் மாஸ்டர்..கண்கலங்கிய ரச்சிதா!

சென்னை : கோபித்துக்கொண்டு சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்த ராபர்ட் மாஸ்டரை செல்லமாக திட்டி ரச்சிதா சமாதானப்படுத்தினார்.

ராபர்ட் மாஸ்டருக்கும் ரச்சித்தாவுக்கும் நல்ல கெமிஸ்டிரி ஒர்க் அவுட்டாகி அப்படியே போய்கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே, ரச்சித்தா மகாலட்சுமி மீது கண் வைத்த ராபர்ட் மாஸ்டர், அவருடன் நட்பாக பழக விரும்புவதாகவும், ரச்சித்தாவுக்காகவே சீரியலை பார்த்தாகவும் வழித்தார்.

முதல் வாரம் டாஸ்க் முடித்ததும் புடவையில் ரச்சித்தாவை பார்த்துவிட்டு, தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என்று பாட்டு பாடாத குறையாக ராபர்ட் மாஸ்டரின் முகத்தில் நூறு வாட்ஸ் பல்ப் எரிந்தது.

காதல் ரசம் சொட்ட சொட்ட

காதல் ரசம் சொட்ட சொட்ட

அது மட்டும் இல்லாமல்,எனக்கு ரச்சிதா மேல் க்ரஷ் இல்லை..ஆனால் பிடிக்கும் என்று ஓபனாகவே ஹவுஸ்மெட்டுகள் முன்னிலையில் கூறியிருந்தார் ராபர்ட். இதையெல்லாம், நோட் பண்ண, பிக் பாஸ் பார்வையாளர்கள் ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் சைட் அடிக்கும் வீடியோவை காதல் ரசம் சொட்ட சொட்ட பேக் ரவுண்டில் ஒரு பாடலை போட்டு டிராண்டாக்கி வருகின்றனர். இந்த எடிட் வீடியோவை பார்த்ததும், நிஜமாகவே இவர்களுக்குள் காதல் இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கே தோன்றுகிறது.

கஞ்சி இருக்கு சாப்பிடுங்க

கஞ்சி இருக்கு சாப்பிடுங்க

இந்நிலையில், ராபர்ட் மாஸ்டரை சாப்பிட்டால் தான் சாப்பிடுவேன் என்று ரச்சிதா அடம் பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் ரச்சிதா சமைத்துக் கொண்டு இருந்தபோது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சென்று உணவு கேட்டுள்ளார். அப்போது ரச்சிதா, உங்களுக்கு பசிக்கிறது என்றால் கஞ்சி இருக்கு குடியுங்கள் என்று சொல்ல, கோபித்துக்கொண்ட ராபர்ட் மாஸ்டர் சாப்பிடாமலே சென்றுவிட்டார்.

கண்கலங்கிய ரச்சிதா

கண்கலங்கிய ரச்சிதா

இதையடுத்து, ஷெரினா, மாஸ்டர் நீங்க சாப்பிடாததால், ரச்சிதாவும் சாப்பிடாமல் இருக்கிறார் வாங்க என்று கிச்சனுக்கு அழைத்து வந்து சிவின் மற்றும் ரச்சிதா முன்னிலையில், வைத்து விசாரிக்கிறார். அப்போது, என்ன மாஸ்டர் இப்படி அடம்பிடிக்கிறீங்க, நான், சாப்பாட்டுக்கு இப்படி சொல்லுவேனா. நீங்க கஞ்சிதான் சாப்பிடுவீங்க என்பதால் அப்படி சொன்னேன் என்று கண்கலங்கிக் கொண்டே கூறுகிறார்.

அடம் பிடிக்காதீங்க

அடம் பிடிக்காதீங்க

அதன் பின் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை சாப்பிடு என்று சொல்ல, ரச்சிதா மாட்டேன் என்பது போல தலையை ஆட்டுகிறார். உடனே குறுக்கிட்ட ஷெரினா, முதலில் சாப்பிடுங்க மாஸ்டர், ஸ்கூல் பையன் மாதிரி அடம் பிடிக்காதீங்க என்று சொன்னார். இதேபோல், சிவினும், ரச்சிதா எந்த உள்நோக்கமும் இன்றி சாதாரணமாகவே கஞ்சி சாப்பிட சொன்னார் என கூறி இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, ஷிவின், ரச்சித்தா,ராபர்ட் மாஸ்டர் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். ரச்சித்தா மற்றும் ராபர்ட் மாஸ்டரின் சண்டையை பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X