For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ’ரச்சிதா உன்மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தோம்’, இப்படியா செய்வாய்?..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

  |

  பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துகளில் இளசுகள் கூட காதல் இல்லாமல் இருக்க முதுமை காதல் துள்ளி விளையாடுவதாக நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

  பொதுவாக பிக் பாஸ் வீட்டில் இளம் வயதினர் காதலில் ஈடுபடுவார்கள் அவர்களுக்குள் நடக்கும் ஊடல் கூடல் சுவாரசியமாக இருக்கும் ஆனால் எந்த சீசனில் இல்லாத முதுமை காதலை இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் பார்க்கிறோம்.

  ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா பின்னே சுற்றிக் கொண்டிருக்க அதற்கு பாலன் கிடைத்தது போல் ராபர்ட் மாஸ்டர் கண்கலங்க ரச்சிதா அதையும் மீறி கண் கலங்க ரிஷி மூலம் படம் பார்ப்பது போன்ற உணர்வு நமக்கு வருகிறது.

  பிக் பாஸ்க்கே டாஸ்க் கொடுக்குறது அசீம் தான்… சரியான கேமரா ஃபோக்கஸ் ஆளு: செம்மையா ரோஸ்ட் செய்த மைனாபிக் பாஸ்க்கே டாஸ்க் கொடுக்குறது அசீம் தான்… சரியான கேமரா ஃபோக்கஸ் ஆளு: செம்மையா ரோஸ்ட் செய்த மைனா

   இதுவரை இல்லாத விசித்திரம் சீசன் 6 பிக்பாஸில்

  இதுவரை இல்லாத விசித்திரம் சீசன் 6 பிக்பாஸில்

  பிக் பாஸ் இதுவரை 5 சீசன்களை கடந்து ஆறாவது சீசன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடிகள் பிக் பாஸ் வீட்டில் காதல் செய்வார்கள். இந்த காதல் பல்வேறு சமயங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகும். இந்த சீசனில் வந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் வித்தியாசமானவர்கள் என்பது ஆரம்பம் முதல் நாம் பார்த்து வருகிறோம். சீசன் 6-ல் வந்த முதல் கிரஷ் ஜோடி அசல் கோலார் மற்றும் நிவாஷினி. சிங்கப்பூர் பெண்ணான நிவாஷினி, காசிமேடு அசல் கோலார் ஸ்டைலை பார்த்து மயங்கி அவர் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார்.

   முதுமைக்காதல் விவகாரம் கசிந்தது

  முதுமைக்காதல் விவகாரம் கசிந்தது

  ஆரம்பத்தில் அரசல் புறசலாக லேசாக அங்கும் இங்கும் வந்த இந்த காதல் தகவல், வளர்ச்சிகளை அவ்வப்போது நெட்டிசன்கள் பதிவிட்டு கிண்டல் அடித்திருந்தனர். இதில் இதில் ரச்சிதாவிற்கு சற்றும் தொடர்பு இல்லை ஆனால் ராபர்ட் மாஸ்டர் தான் பின்னால் சுற்றி, சுற்றி வருகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ரச்சிதாவும் இதை ஒரு முறை வேறு வழியில்லை என்ன செய்வது நான் பழகித்தான் ஆக வேண்டும் என்றெல்லாம் ஷிவினிடம் கூறிக் கொண்டிருந்தார். அவருக்கு வெளியில் பெரிய அளவில் ஆதரவும் இருந்தது.

   ராபர்ட் மாஸ்டரை எளிதாக கையாண்ட ரச்சிதா

  ராபர்ட் மாஸ்டரை எளிதாக கையாண்ட ரச்சிதா

  ரச்சிதா பின்னால் ராபர்ட் மாஸ்டர் சுற்றுவது வெளிப்படையாக மற்ற போட்டியாளர்களுக்கு தெரிய ஆரம்பித்து கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை ராபர்ட் மாஸ்டர் கிட்டே வரும் பொழுது முகம் சுளிக்காமல் சிரித்தபடி அதை ரச்சிதா அனுமதித்த போது ஒரு நடிகையாக அவர் இதை போல் எத்தனை பேரை பார்த்திருப்பார் ஆகவே சாதாரணமாக கையாளுகிறார் என்று அனைவரும் நினைத்தனர். ராஜாவும் ராணியும் எப்பொழுதும் ஒன்றாக சுற்ற வேண்டும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதால் ரச்சிதா ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தார்.

   ராஜா ராணி டாஸ்க்கில் அத்துமீறிய முதுமை ஜோடி

  ராஜா ராணி டாஸ்க்கில் அத்துமீறிய முதுமை ஜோடி

  இது டாஸ்க்கில் நடக்கும் விஷயம் தானே என்று யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ராபர்ட் மாஸ்டர் அவ்வப்பொழுது ரச்சிதாவிடம் நெருங்கி நடக்க அதற்கு சரியான எதிர்ப்பை காண்பிக்காமல் சிரித்தபடி அதை அனுமதித்ததை காண முடிந்தது. ராஜா ராணி டாஸ்க்கில் ரச்சிதாவின் பின்புறம் வந்து கட்டி அணைத்தபடி அவருக்கு வில்வித்தை சொல்லி கொடுப்பது போல் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்டார். இதற்கு ரச்சிதா எந்த எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை. இதனால் தைரியம் அடைந்த ராபர்ட் மாஸ்டர் மெல்ல மெல்ல தன்னுடைய வ்லையை வீசத் தொடங்கினார். உரிமை எடுத்துக்கொண்டு பேசத் தொடங்கினார்.

  ராஜாவின் பதவியை பறித்த பிக்பாஸ்

  ராஜாவின் பதவியை பறித்த பிக்பாஸ்

  இந்த நிலையில் ராஜா ராணி டாஸ்கில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதிக பொருட்கள் திருட்டு போகிறது என்று அதற்கு ராஜாவின் செயல்பாடு சரி இல்லை என்று ராஜகுரு மூலம் ராஜாவை வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியேற்றப்பட்ட பின் பிக்பாஸ் வீட்டில் எப்படி திருட்டு நடந்தது என்று குறும்படம் போட்டு காட்டினார்கள். இதைக்கண்ட ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். தனியாக கார்டன் ஏரியாவில் சென்று படுத்துக்கொண்டு விசும்பி அழ ஆரம்பித்தார். அப்பொழுது ஹவுஸ் மேட்கள் அவரிடம் வந்து இது விளையாட்டு தானே, டாஸ்க் தானே ஏன் இப்படி இதை பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ஆறுதல் கூறினர்.

   ரச்சிதா ஏமாற்றி விட்டதாக முறுக்கிக்கொண்ட ராபர்ட் மாஸ்டர்

  ரச்சிதா ஏமாற்றி விட்டதாக முறுக்கிக்கொண்ட ராபர்ட் மாஸ்டர்

  ஆனால் ரச்சிதா என்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை என்று அழுதார். இந்த போட்டியில் ரட்சிதாவிற்கு தனி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, அவர் எப்படி உங்களிடம் சொல்வார் என்று கேள்வி எழுப்பினர். ராபர்ட் மாஸ்டரிடம் போய் ரச்சிதா மன்னிப்பு எல்லாம் கேட்டு பார்த்தார். ராபர்ட் மாஸ்டர் கண்டுக்கொள்ளவே இல்லை. ரச்சிதா தனியாக போய் உடை மாற்றும் அறையில் அழுது கொண்டிருந்தார். இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ராபர்ட் மாஸ்டர் எல்லாம் ஒரு ஆளு அவருடைய எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து நீ அழுகிறாயே ரச்சிதா இது நியாயமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

   சினிமா காதலை மிஞ்சிய முதுமைக்காதல்

  சினிமா காதலை மிஞ்சிய முதுமைக்காதல்

  இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அடுத்து வந்த சம்பவங்கள் இளம் தலைமுறை காதலர்கள் மிஞ்சிவிடும் அளவிற்கு சினிமா காதல் போல் காட்சிகள் இருந்ததை பார்க்க முடிந்தது. இவர்களுக்கு என்ன வயது இவர்களுடைய மனமுதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததை காண முடிந்தது. கார்டன் ஏரியாவில் தனித்தனியாக ஊடல் ஏற்பட்ட காதலர்கள் போல் பிரிந்து உட்கார்ந்து கொண்டிருந்த ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

   பார்க்காத என்னை பார்க்காத பாடலைபோட்டு மீம்ஸ்

  பார்க்காத என்னை பார்க்காத பாடலைபோட்டு மீம்ஸ்

  ரச்சிதா அங்கே கிடந்த கயிற்றை எடுத்து தன்னை தானே தாக்கிக் கொண்டிருந்தார். இதை ஓரக்கண்ணால் ராபர்ட் மாஸ்டர் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் பிக் பாஸ் அழைக்க அனைவரும் உள்ளே சென்றனர். இந்த நேரத்தில் ராபர்ட் செய்த காரியம் நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. என்னடா சினிமாவில் கூட இப்படிப்பட்ட காதல் காட்சி பார்க்கவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்கள். ரச்சிதா சென்றவுடன் அவர் தாக்கி கொண்ட அந்த கயிற்றை எடுத்து ராபர்ட் மாஸ்டர் வெறுப்பாக வீசி எறிந்தார். இதை சூர்யா படத்தில் வரும் பாடலை போட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

   சிறைக்கு போன ராஜா ராணி

  சிறைக்கு போன ராஜா ராணி

  இதைத்தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அடுத்து உள்ளே லிவிங் ஏரியாவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் சரியாக பர்பாமென்ஸ் செய்யாதவர்கள் குறித்து நடந்த வாக்கெடுப்பில் ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டரும் சரியாக செயல்படவில்லை என்று அனைவரும் தெரிவித்தனர். அவர்களை சிறையில் அடைக்க பிக்பாஸ் உத்தரவிட்டார். ராபர்ட் மாஸ்டர் முகத்தை தூக்கி வைத்தப்படி சிறைச்சாலைக்கு சென்றார். சிறைச்சாலைக்கு செல்லும் முன் பாத்ரூம் ஏரியாவில் விக்ரமணிடம் பேசிக் கொண்டிருந்தார் ரச்சிதா. அப்போது ராபர்ட் மாஸ்டர் இப்படி எல்லாம் செய்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

   முதலில் ஊடல் பின்னர் கூடல்

  முதலில் ஊடல் பின்னர் கூடல்

  சிறையில் அடைக்கப்பட்டவுடன் ரச்சிதா நடந்து கொண்ட விதம் மாஸ்டர் நீங்கள் தள்ளி அமருங்கள் ரச்சிதா படுத்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் ஹவுஸ்மேட்ஸ் கூறும் அளவிற்கு ரச்சிதா வேண்டா வெறுப்பாக இருந்தது தெரிய வந்தது. பின்னர் கொஞ்ச நேரம் பொறுத்து தரையில் படுத்துக்கொண்டு போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக்கொண்ட ரச்சிதா போர்வைக்குள் விசும்பி விசும்பி அழுதார். இதை பார்த்த ராபர்ட் மாஸ்டர் தைரியம் வந்தவராக சினிமா பாடல் ஒன்றை பாடினார். பின்னர் கீழே இறங்கி ரச்சிதாவை பார்த்து அழாதே என்று ஆறுதல் கூறினார். இந்தக் காட்சியை வைத்து என்னங்கடா கொஞ்ச நேரம் முன் இருவரும் ஊடல் பின்னர் அழுகை இப்ப கூடல் இது டாஸ்க் தானே. இது என்ன இவர்கள் இளம் காதலர்கள் போல் நடந்துக்கொள்கிறார்கள் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததை பார்க்க முடிந்தது.

   ரச்சிதா எங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டாய் புலம்பும் நெட்டிசன்கள்

  ரச்சிதா எங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டாய் புலம்பும் நெட்டிசன்கள்

  பின்னர் ரச்சிதா ராபர்ட் மாஸ்டர் சிரித்தப்படி பேசிக்கொண்டிருந்தனர். இதையும் எடுத்து போட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். ரச்சிதா உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம் கடைசியில் நீயும் இப்படி ஆகிவிட்டாயே என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் காமெடி பாருங்கள் இருவர் உடையும் ஒரே கலர் ஒரே டிசைன் பலமுறை இப்படித்தான் அணிகிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எதை எதையெல்லாம் கவனிக்கிறார்கள்.

  English summary
  old love in the Bigg Boss house chatter.Netizens are criticizing. Usually in Bigg Boss house young people fall in love and the interplay between them is interesting but in this season we see old age love like never before in Bigg Boss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X