Don't Miss!
- Technology
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது கடைசியா ரச்சிதா செய்த செயல்.. ஜூம் பண்ணி பார்த்த பிக் பாஸ் டீம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எதிர்பார்த்ததை போலவே வெளியேறி விட்டார்.
ராம் ராமசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் ஒருவேளை வெளியேறி விடுவார்களோ என்கிற ரேஞ்சில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றது ரொம்பவே அருமை.
ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது ரச்சிதா பண்ண அந்த ஒரு விஷயத்தை கேமரா ஃபுல் ஃபோகஸாக ஜூம் செய்து பார்த்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுப் போட சொல்லியும் மணி நிலைமை இப்படி ஆகிடுச்சே.. கடைசி நேர ட்விஸ்ட்!

50 நாட்கள்
பிக் பாஸ் வீட்டில் முதல் போனியாக டான்ஸர் சாந்தி வெளியேறிய நிலையில், வயதானவர்களை டார்கெட் பண்றாங்க அடுத்து ராபர்ட் மாஸ்டர் தான் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. ஆனால், ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களை கடந்து பாதி கிணறு தாண்டிய நிலையில் தான் எவிக்ஷன் பள்ளத்தில் விழுந்துள்ளார்.

அப்பா பாசம்
அப்பா பாசம் நினைவில் வந்து விட்டது. இந்த வாரம் நான் வெளியேறுகிறேன் என ஆடியன்ஸிடமே ராபர்ட் மாஸ்டர் சொன்ன நிலையில், அவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகி உள்ளார். ரச்சிதா உடன் ரொமான்ஸ் செய்து வந்த நிலையில், அந்த பெயருடன் போகக் கூடாது என்பதற்காக அப்பா - மகள் டிராமாவுடன் ராபர்ட் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் வில்லங்க ட்வீட்களை போட்டு வருகின்றனர்.

பயண வீடியோவில்
ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ராஜா ராணியாக இருந்த பயண வீடியோவை காட்டும் போதே ராபர்ட் மாஸ்டருக்கு உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. இந்த அளவுக்கு நாம உள்ள என்ஜாய் பண்ணிருக்கோமா என நினைத்த அவர் கமலுக்கு நன்றி சொல்லி விட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ரச்சிதா செய்த செயல்
ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது ரச்சிதா எப்படி அழப் போகிறார் பாருங்களே என நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த நிலையில், கடைசி வரை ஒரு சொட்டு கண்ணீர் கூட ரச்சிதா விடவில்லை. பதிலுக்கு கடைசி வரை அவர் உடன் கேட் வரை அமைதியாக வந்த ரச்சிதா கடைசியாக அவருடன் கை குலுக்கி விட்டு அவருக்கு குட் பை சொன்ன காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

ஜூம் போட்டு பார்த்தாலும்
ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய பின்னர் முதல் நபராக வந்து சோபாவில் சைலன்ட்டாக அமர்ந்த ரச்சிதா அழுகிறாரா என்பதை பார்க்க பிக் பாஸ் கேமராக்கள் அவர் முகத்தை எக்ஸ்ட்ரீம் ஜூம் செய்து பார்த்தன. அப்போதும் அவர் முகத்தில் எந்தவொரு ரியாக்ஷனோ, கண்ணீரோ வராதது தெரிந்து அப்படியே பின் வாங்கி விட்டன.