Don't Miss!
- News
தீர்ப்பு வழங்க கட்டாயப்படுத்துறீங்களா? அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் போக கூடாது.. நீதிபதிகள் பளீர்
- Finance
H-1B visa: அலேக்கா தூக்கும் 3 நிறுவனங்கள்.. இந்திய நிறுவனங்கள் ஆதிக்கமா? உண்மை என்ன?
- Automobiles
பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பாலியல் போதை அதிகமாக இருக்காம்... ஜாக்கிரதை!
- Technology
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- Sports
"பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறாங்க" ஹர்திக்கின் கேப்டன்சி.. ரமீஷ் ராஜா சுவாரஸ்ய கருத்து!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் 35 வயதில் அதை நிச்சயமா செய்வேன்..விக்ரமனிடம் தன் கனவை சொன்ன ரச்சித்தா!
சென்னை : நடிகை ரச்சித்தா, தனது வாழ்க்கையின் கனவு குறித்து சக போட்டியாளரான விக்ரமனிடம் மனம் திறந்து கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்பதாவது வாரம் சிறப்பாக முடிந்து, பத்தாவது வாரத்தில் அடி எடுத்துவைத்துள்ளது.
கடந்த வாரம் நடந்த கதாபாத்திர டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணன், மைனா, ரச்சித்தா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் மூன்றாவது முறையாக மைனா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரச்சித்தா தன்னை ஒழுக்கமா காட்டிக்கிறாங்க..படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!

நடிகை ரச்சித்தா மகாலட்சுமி
பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக உள்ளே வந்துள்ள ரச்சித்தா மகாலட்சுமி இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகவே உள்ளார். வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டர் சதா தன் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்த போதும், அவரை காயப்படுத்தாமல் அவருக்கு அறிவுரை கூறி, வீட்டில் மற்றவர்களிடம் எப்படி இருப்பீர்களோ அதே போல என்னிடமும் பேசுங்கள் என்று அறிவுரை கூறினார்.

பாராட்டிய ரசிகர்கள்
ராபர்ட் மாஸ்டர் நான் உனக்கு அண்ணன் என்றால் எனக்கு முத்தம் கொடு என கையைப்பிடித்து வம்பு செய்த போதும், கோபம் மனதிற்குள் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், நான் அண்ணாக இருந்தாலும் முத்தம் கொடுக்க மாட்டேன் என கூறி விட்டு அங்கிருந்து நைசாக கழுவி விட்டார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது ரச்சித்தாவை அனைவரும் பாராட்டினார்கள்.

கலக்கிய ரச்சித்தா
கடந்த வாரம் நடந்து முடிந்த கதாபாத்திர டாஸ்கில் சீதா தேவி கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து முடித்தார் ரச்சித்தா. நடனம், அசைவு பேசுவது, அழுவது என அனைத்தும் சரோஜா தேவிப்போல செய்து பெஸ்ட் பேர்பாமர் ஆன ரச்சித்தாவை கமலஹாசனும் மனம் திறந்து பாராட்டினார். ரச்சித்தா சேஃப் கேம் விளையாடுகிறார், வீட்டில் நடக்கும் எந்த பிரச்சனையிலும் தலையிடுவதில்லை, அவரின் உண்மை முகம் இது இல்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்த போதும், நான் இப்படித்தான் என்று தனது விளையாட்டை விளையாடி வருகிறார்.

என் வாழ்க்கையின் லட்சியம்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சொர்க்கம் மற்றும் நரகம் டாஸ்க் நடந்து வருகிறது. இதில், சொர்க்கத்தில் இருக்கும் ஏஞ்சலாக இருக்கும் ரச்சித்தா தனது ஆசை குறித்து விக்ரமனிடம் மனம் திறந்து பேசி உள்ளார். அதில், ஏஞ்சலாக இருக்கும் போது என்னுடைய கார்டியன் ஏஞ்சலைப்பற்றி நினைக்கிறேன். அவர் தான் என்னை இந்த அளவுக்கு பாதுகாக்கிறார் என்றார். மேலும், என்னுடைய வாழ்க்கையின் லட்சியமே 35 வயதில் ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்பதுதான் என்றார்.

ரச்சித்தாவின் தங்கமான மனசு
ஏன் 35 வயது வரை காத்திருக்கிறேன் என்றால், தத்து எடுக்கும் போது என்னிடம் பணம் இருக்க வேண்டும், மேலும் சில விதிமுறைகள் எல்லாம் இருக்கு என்பதால், அதற்காக நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். இதுதான் என் உள் மனதில் இருக்கும் ஆசை இதை நிச்சயம் செய்வேன் என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த விக்ரமன் ரச்சித்தாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரச்சித்தாவை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். அவரின் இந்த தங்கமான மனசுக்காகவாவது அவர் ஜெயிக்க வேண்டும் என இணையத்தில் கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.