»   »  பேயாக மாறிய ராதாரவி.... ஜீவா-அட்லீக்காக!

பேயாக மாறிய ராதாரவி.... ஜீவா-அட்லீக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவா-அட்லீயின் சங்கிலி புங்கிலி கதவைத் தொற படத்தில் நடிகர் ராதாரவி பேயாக நடித்து வருகிறார்.

அட்லீ தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஐசக் இயக்கி வரும் படம் சங்கிலி புங்கிலி கதவைத் தொற. இதில் ஜீவாவுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, இளவரசு மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Radha Ravi plays a Demon in Sangili Bungili Kathava Thorae

'ஜில் ஜங் ஜக்' புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

நடிகர் ராதாரவி இப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் "இப்படத்தின் இயக்குநரை எனக்கு நீண்ட வருடங்களாகத் தெரியும்.

எனவே பேயாக இப்படத்தில் அவர் நடிக்கக் கேட்டதும் உடனடியாக ஒப்புக் கொண்டேன். எனது வழக்கமான படங்களில் இருந்து இந்தக் காதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது.

இப்படத்தில் வழக்கமான பேய்களைப் போல இல்லாமல், ஒரு வித்தியாசமான பேயாக நடித்து வருகிறேன்" என்று தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் இயக்குநர், நடிகர் கமலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Radha Ravi plays a Demon in Jeeva-Atlee's Sangili Bungili Kathava Thorae.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil