»   »  ரஜினி, அஜீத்தை அடுத்து எம் மாப்ள ராம்கி தான் அழகு: ராதாரவி

ரஜினி, அஜீத்தை அடுத்து எம் மாப்ள ராம்கி தான் அழகு: ராதாரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி, அஜீத்தை அடுத்து ராம்கி தான் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அழகாக இருப்பதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஆங்கிலபடம். ராம்கி நடித்துள்ள இந்த படத்தை புதுமுகம் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். படத்தில் ராம்கி சால்ட் அன்ட் பெப்பர் லுக் அதாங்க நரைத்த முடி, தாடியுடன் வருகிறார்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசுகையில்,

ரஜினி சார்

ரஜினி சார்

வெள்ளை முடி, தாடியிலும் கூட இளமையாகவும், அழகாகவும் தெரிவது ரஜினி சார் தான். பெரிய சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை கண்டுகொள்ளாமல் பொது இடங்களுக்கு வழுக்கைத் தலையுடன் வெள்ளை தாடியில் எளிமையாக வருவார். அதிலும் இளமையாக இருப்பார்.

அஜீத்

அஜீத்

ரஜினி சாரை அடுத்து வெள்ளை முடி, தாடியில் அதாங்க சால்ட் அன்ட் பெப்பர் லுக்குன்னு சொல்கிறாங்க. அதில் அழகா பார்த்தது, இளமையாக பார்த்தது அஜீத்தை தான்.

நானும்

நானும்

ரஜினி, அஜீத்தை பார்த்து நானும் கொஞ்ச நாள் வெள்ளை முடியுடன் சுற்றினேன். என்னை பார்த்தவர்கள் என்ன அண்ணே வயசாகிடுச்சான்னு கேட்டாங்க.

மாப்ள ராம்கி

மாப்ள ராம்கி

தற்போது பார்த்தால் மாப்ள ராம்கி வெள்ளை தாடியுடன் உள்ளார். வெள்ளை தாடியிலும் இளமையாக இருக்கும் மூன்றாவது நபர் அவர் தான்.

பேய்

இந்த படத்தில் பேயை எல்லாம் காண்பித்தார்கள். முதலில் பேயை பார்த்தால் பயப்படுவார்கள். தற்போது குழந்தைகள் கூட திரையில் பேயை பார்த்தால் ஹை பேய் என்கிறது. இப்பொழுது எல்லாம் பேயை பார்த்து யாரும் பயப்படுவதே இல்லை. அந்த அளவுக்கு கொண்டு வந்தாச்சு பேயை.

English summary
Actor Radha Ravi said that after Rajinikanth and Ajith, it is Ramki who looks young in salt and pepper look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil