»   »  முட்டாப்பயலே, ஹீரோவா நடிச்சி சினிமாவ கெடுக்காதடா என்றார் ராதாரவி: பவர்ஸ்டார்

முட்டாப்பயலே, ஹீரோவா நடிச்சி சினிமாவ கெடுக்காதடா என்றார் ராதாரவி: பவர்ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டாப்பயலே, ஹீரோவா நடித்து சினிமாவை கெடுக்காதடா என நடிகர் ராதாரவி தன்னிடம் கூறியதாக பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஆங்கிலபடம். ராம்கி நடித்துள்ள இந்த படத்தை புதுமுகம் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ஆங்கிலபடத்திற்கு முதலில் இங்கிலீஷ் படம் என பெயர் வைத்திருந்தனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இங்கிலீஷ்படம்

இங்கிலீஷ்படம்

இங்கிலீஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்கள். இங்கிலீஷ் படத்திற்கு நான் ஏன் என கேட்டேன். அதன் பிறகே அது தமிழ் படம் என்றும், ராம்கியின் படம் என்றும் கூறினார்கள்.

ராம்கி

ராம்கி

எனக்கு ராம்கியை மிகவும் பிடிக்கும். இத்தனை வருடமாகியும் அவரின் தலைமுடி அப்படியே உள்ளது. அவரை பார்க்கும்போது பொறாமையாக உள்ளது. பலநேரம் அவர் முடி நிஜம்தானா என்பை தெரிந்து கொள்ள அவரை உரசுவேன்.

ராதாரவி

ராதாரவி

நான் சினிமா துறைக்கு வர முக்கிய காரணம் என்று சொன்னால் அது ராதாரவி அண்ணன். சினிமாவுக்கு வரும்போது அவர் வீட்டுக்கு தான் முதலில் சென்று அண்ணன், படம் பண்ணலாம் என இருக்கிறேன், ஹீரோவாக பண்ணலாமா என அவரிடம் கேட்டேன்.

காமெடி

காமெடி

நான் ஹீரோவாக பண்ணலாமா என கேட்டதற்கு ஏலே, முட்டாப்பயலே அப்படி எல்லாம் பண்ணாதடா. நீ பாட்டுக்கு ஹீரோவாக நடித்து சினிமா துறையை கெடுத்துடாதடா. உனக்கு காமெடி தான் செட் ஆகும் என்றார் ராதாரவி.

என் பணம்

என் பணம்

என்ன அண்ணே, இப்படி சொல்றீங்க. என் பணம்ணே என்றேன். இருக்கட்டும்டா நீ காமெடியா பண்ணு என்றார் ராதாரவி. அதன்படி நடித்தேன். மீண்டும் அவர் வீட்டிற்கு சென்று அண்ணே நான் வில்லனாக நடிக்கட்டா என்றேன். அவர் வேண்டாம் என்றதற்கு பொறாமையில் கூறுகிறார் என நினைத்தேன்.

புதுப்படம்

புதுப்படம்

நமக்கு நல்ல டெக்னீஷியன்கள் கிடைக்கவில்லை என இதுபோன்ற இசை வெளியீட்டு விழாக்களுக்கு வரும்போது ஃபீல் பண்ணியிருக்கிறேன். பரவாயில்லை, ஜனவரியில் புதுப்படம் ஒன்றை பிரமாண்டமாக எடுக்கப் போகிறேன். கபாலியில் ரஜினி சொல்வது போன்று வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.

    English summary
    Powerstar Srinivasan said that actor Radha Ravi warned him not to spoil cine field by acting as hero.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil