»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை:

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் நடிகை ராதாவை நேரில் ஆஜராகும்படி நெல்லை முதலாவதுமாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஏர்வாடியைச் சேர்ந்தவர் பாத்திமா நாச்சி. இவருக்கு அங்கே நிலம் இருந்தது. இவரது கணவர் பீர் முகமது. பாத்திமா நாச்சி 1988 ம் வருடம் இறந்துவிட்டார். இதையடுத்து இவருடைய பெயரில் இருந்த நிலத்தை பாத்திமாவின் இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் சேர்ந்த அய்யாத்துரை நாடார்என்பவருக்கு விற்று விட்டனர்.

அய்யாத்துரை நாடார் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர். பாத்திமா நாச்சியின் வாரிசுகளிடமிருந்து வாங்கிய நிலத்தை அய்யாத்துரை நாடார் 1995 ம் ஆண்டு நடிகை ராதாமற்றும் அவரது கணவர் ராஜசேகரன் நாயருக்கு விற்று விட்டார்.

பாத்திமா நாச்சியின் மூத்த மகன் ஜபருல்லாவுக்கும் தனது தாயாரின் நிலத்தில் பங்கு உள்ளது. இந்த விஷயம் தெரியாமல், பாத்திமாவின் வாரிசுகளிடமிருந்துவாங்கிய நிலத்தை முழுவதுமாக நடிகை ராதாவுக்கும், அவரது கணவர் ராஜசேகர நாயருக்கும் விற்று விட்டார் அய்யாத்துரை நாடார்.

இதையடுத்து ஜபரூல்லா, நடிகை ராதா வாங்கிய நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளது என்று நெல்லை மாவட்ட போலீஸில் புகார் செய்தார். மாவட்டஎஸ்.பி.உத்தரவுப்படி, நடிகை ராதா, அவரது கணவர் ராஜசேகர நாயர், அய்யாத்துரை நாடார் ஆகிய மூவர் மீதும் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குத்தொடர்ந்தனர்.

இவர்கள் மீது, திருநெல்வேலி முதலாவது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு செவ்வாய்க்கிழமைவிசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் கமலாதேவி, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதி மன்றத்தில் ஆஜராகும்படி உத்தர விட்டார்.

Read more about: actress dispute land magistrate radha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil