Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வித்யாசாகருக்கு பெஸ்ட் ட்ரீடமென்ட் கொடுக்க சொன்னார் சிஎம்...ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தகவல்
சென்னை : நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

நடிகை மீனா, பெங்களூருவை சேர்ந்த ஐடி இன்ஜினியரும் தொழிலதிபருமான வித்யாசாகர் என்பவரை 2009 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளார். இவரும் குழந்தை நட்சத்திரமாக விஜய்யின் தெறி படத்தில் நடித்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு மீனா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதிலிருந்து மீண்ட பிறகு, கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக வித்யாசாகருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தரமற்ற
உணவுகளை
தடுக்கணும்..
மீனாவின்
கணவருக்கு
அஞ்சலி
செலுத்திய
பின்
மன்சூர்
அலி
கான்
பேச்சு
இந்நிலையில் டாக்டர்கள் ஆலோசனையின் படி வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தார்.
வித்யாசாகரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த ரம்பா, லட்சுமி, இயக்குநர் சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு, மீனாவிற்கு ஆறுதல் கூறி சென்றுள்ளனர். டான்ஸ் மாஸ்டர் கலா, அதிகாலை முதலே மீனாவின் வீட்டில் இருந்து வருகிறார். அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தான் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மீனாவின் வீட்டிற்கு நேரில் வந்து வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், வித்யாசாகரின் இந்த திடீர் மரணம் ஷாக்கிங்காக உள்ளது. ஜனவரி மாதம் முதல் தான் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட் அளிக்க வேண்டும் என சிஎம் கூறி இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வந்தோம்.
இன்று பகல் 2.30 மணியளவில் பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. மீனாவின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை மாநகராட்சி சார்பில் செய்து வருகிறோம் என்றார்.