twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்க தேர்தல்... விஷாலை முந்தும் ராதாகிருஷ்ணன் அணி!

    By Shankar
    |

    கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க...கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க...

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு விட்டாலும் பிலிம்சேம்பர் அமைப்பில் இருந்து விலகவும் புதிய அமைப்பில் இணையவும் தயாரிப்பாளர்கள் மத்தியில் தயக்கம் இருந்தது.

    இதனை போக்கவே ஏவிஎம் முருகன், இயக்குநர் பாரதிராஜா போன்றவர்கள் தலைவர் பொறுப்புக்கு வந்தனர். கே.ஆர்.ஜி தலைவர் பொறுப்புக்கு வந்த பின் சங்கத்தின் செயல்பாட்டை தீவிரப்படுத்தினர். அன்றைக்கு தமிழகத்தின்ஆளும் கட்சி, எதிர்கட்சி தலைவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரிடமும் அரசியல் கடந்து சினிமா வளர்ச்சி, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நலம் காக்க நட்புறவை பலப்படுத்தி வைத்திருந்தார். தயாரிப்பாளர்கள் சங்கம் கட்சி சார்பற்று இயங்கியது. சங்கம் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதனை அரசாங்கம் முதல் தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் வரையிலும் அங்கீகரிக்க தொடங்கினார்கள். இந்திய திரைப்பட துறையில் ஆளுமை மிக்க அமைப்பாக வலம் வர அடித்தளத்தை எம் ஜி ஆர், கருணாநிதி துணையுடன் கட்டமைத்த பெருமைக்குரியவர் அமரர் கே ஆர்ஜி அவர்கள்.

    Radhakrishnan team leads in Producers council election

    இவருக்கு அடுத்து வந்த தலைவர்கள் இதனை கடைப்பிடிக்க தவறியதால் சங்கத்திற்குள் ஆளும் கட்சி அரசியல் ஆதிக்கம் செலுத்தியது. அமரர் இராம நாராயணன் தலைவராக இருந்த ஐந்து வருடங்களும் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்பட வேண்டிய காலம். தயாரிப்பாளர்கள் பிரச்சினை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டது. திரைத்துறை சார்ந்த பிரச்சினைகளை எளிதாக தடையின்றி அரசிடம் கொண்டு சென்று வாதாடி காரியம் சாதிக்கும் தலைவராக இராம நாராயணன் செயல்பட்டார். அவரது பதவி விலகலுக்கு பின் சங்கம் தனித்தன்மை இழந்தது. கோஷ்டி மோதலால் கோர்ட், வழக்கு என அலையவேண்டி வந்தது.

    கலைப்புலி தாணு தலைவரான பிறகுதான் இந்த வம்பு வழக்கு ஏதுமின்றி சங்கம் அமைதியாக இயங்கியது எனலாம். விஷால், சிவகார்த்திகேயன், கார்த்தி, கமல்ஹாசன் நடித்த படங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அந்தப் படங்கள் ரீலீஸ் ஆக பணியாற்றியவர்கள் தயாரிப்பாளர் சங்கம்தான் உறுப்பினர்கள்தான். குறிப்பாக இப்போதைய தலைவர் கலைப்புலி எஸ் தாணு.

    இதற்கிடையில் நடிகர் சங்க செயலாளரான நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்ட பஞ்சாயத்து செய்கிறது என திரி கொளுத்தி போட, சங்க உறுபபினர்கள் கொந்தளித்துவிட்டனர். நடிகர் விஷால் - தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் மோதல் காரணமாக அனல் பறக்கும் இன்றைய தேர்தல் களத்தில், தயாரிப்பாளர்களுக்கு நடிகர்கள் தலைமையா... இல்லை தொழில் முறை தயாரிப்பாளர்கள் தலைமையா என்ற கேள்விக்கு 12 12 வாக்காளர்கள் ஏப்ரல் 2 அன்று, அதாவது நாளை நடை பெற உள்ள தேர்தலில் முடிவு எழுத காத்திருக்கின்றனர்.

    கலைப்புலி தாணு மீண்டும் போட்டியிட விரும்பாத நிலையில், தலைமை பொறுப்புக்கு கேயார், கலைப்புலி சேகரன், சிவா, விஷால், ராதாகிருஷ்ணன் என ஐந்து முனை போட்டி ஏற்பட்டது. தொழில் முறை தயாரிப்பாளர்தான் தலைவராக வரவேண்டும் என்று பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் வலியுறுத்த தொடங்கினார்கள்.

    Radhakrishnan team leads in Producers council election

    தயாரிப்பாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசி வரும் விஷால், அவருக்கு துணையாக வரும் இயக்குனர் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், ஞானவேல்ராஜா போன்றவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பாரம்பர்யம் மிக்க தயாரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தினார்கள். மூன்று முறை சங்கத்தில் செயலாளர், துணை தலைவர், பொருளாளர் என பொறுப்புகள் வகித்த போது எந்த குற்றசாட்டுக்கும் உள்ளாகதவர் ராதாகிருஷ்ணன் மட்டுமே. அனைத்து தரப்பினரும் விரும்பும் ,வேட்பாளராக, எளிதில் அணுக கூடிய மனிதராக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்து சிவா, கலைப்புலி சேகரன் இருவரும் தலைவர் போட்டியிலிருந்து வாபஸ் வாங்கியுள்ளனர்.

    இந்த சாதனை நிகழ கடும் பணியாற்றி வெற்றி கண்ட பெருமைக்குரியவர் கலைப்புலி தாணு. இதனால் இன்றைய தேர்தல் களத்தில் ராதாகிருஷ்ணன் - விஷால் நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. விஷால் குளறுபடி பேச்சால் தயாரிப்பாளர்கள் ஆட்சேபத்துக்கும், தனது எளிய அணுகுமுறையால் ராதாகிருஷ்ணன் முன்னேற்ற பாதையிலும் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

    இரு தரப்பு வேட்பாளர்கள் பற்றிய கழுகுப் பார்வை, இப்பொறுப்புக்கு வருவதால் என்ன பலன்?

    அடுத்த கட்டுரையில்...

    - ராமானுஜம்

    English summary
    The history of Tamil film producers council and candidates details for the forthcoming election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X