»   »  கமல் ஹாஸனை மோசமாக பேசினார் ராதாரவி.. என்கிட்ட ஆதாரம் இருக்கு! - விஷால்

கமல் ஹாஸனை மோசமாக பேசினார் ராதாரவி.. என்கிட்ட ஆதாரம் இருக்கு! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனை மோசமாகப் பேசினார் நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி. அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது, என்று குற்றம்சாட்டியுள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் சங்க தேர்தல், சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் விஷாலும் அவரது ஆதரவாளர்களும்.

Radharavi bad mouthed on Kamal - Vishal

நடிகர் சங்கத்துக்கு புதிய தேர்தல் நடக்கும்போது, அதில் இப்போதுள்ள நிர்வாகிகள் யாரும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் விஷால் அணியினர்.

தங்கள் அணிக்காக தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் நடிகர் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றியும் சொல்லி வருகிறார்.

விஷால் அணிக்கு நாடக நடிகர்கள் மத்தியிலும் ஆதரவு பெருக ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று திருச்சி தேவர் ஹாலில் நாடக நடிகர்களுடன் விஷால் அணியினர் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய விஷால், "நடிகர் சங்க தேர்தலில் பதவி நாற்காலியை பிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஊர் ஊராக செல்லவில்லை. சினிமா எனது குடும்பம். அதில் நாடகக் கலைஞர்களும் அங்கம். அவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கிறேன்.

நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன. நடிகர் சங்கம் பற்றி விஷால் மட்டுமல்ல எல்லா நடிகர்களும் இனி கேள்வி கேட்பார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது. நடிகர் சங்க தேர்தலில் மூத்த சினிமா கலைஞர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட அனைத்து முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வாக்களிக்கும்படி கேட்போம்.

கமலஹாசன் பற்றி ராதாரவி மோசமாகப் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன். கமலஹாசன் எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. கமல் ஹாஸன் போன்ற சிறந்த கலைஞர்களையே அவமதிக்கிறார்கள் என்பதற்காக சொல்கிறேன்," என்றார்.

English summary
Actor Vishal alleged that actor Radharavi has bad mouthed about Kamal Hassan in a chat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil