»   »  'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல

'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்தம்மா மேல தெர்மாக்கோலை போட்டிருந்தால் அவரின் ஆவி மேலே போயிருக்காதுல. அந்த ஆவி தப்பிச்சிருக்கும்ல. அந்த தெர்மாக்கோல் ஐடியா செல்லூர் ராஜுவுக்கு அப்போவே வராம இப்ப வந்திருக்கேன்னு வருத்தமாக உள்ளது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

ஐக் இயக்கியுள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி கூறும்போது,

தியேட்டர்

தியேட்டர்

இந்த தியேட்டர் உரிமையாளர் நம்ம நெருங்கிய உறவினர் தான். நடிகர் சங்கம் இரண்டா பொளந்ததற்கு காரணமே இவர் தான். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகை

பத்திரிகை

என்னை வாழ வைக்கும் பத்திரிகை அன்பர்கள். இன்னைக்கு வாழ வைப்பது இன்டர்நெட். ராதா ரவி ஸ்பீச்சுன்னு போட்டு போட்டு என்னை இரண்டு முறை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டாங்க கையெழுத்து போடச் சொல்லி.

கமல்

கமல்

நானும், கமல் ஹாஸனும் பால்ய சினேகிதர்கள். கமல் அடிக்கடி அரசியல் பேச ஆரம்பிச்சுட்டார். நல்லா சொன்னார் தெர்மாக்கோல் பற்றி. ஆவி என்றதும் தெரிமாக்கோல் நினைவுக்கு வருகிறது என்றார்.

அரசியல்

அரசியல்

நான் அரசியல் பேசிக்கிட்டு இருக்கிறவன். ட்விட்டரில் பேசுறவன் இல்லை. நான் நேரடியாக பேசுகிறவன். அப்ப தான் எனக்கு நினைவு வந்துச்சு.

தெர்மாக்கோல்

தெர்மாக்கோல்

அந்தம்மா மேல தெர்மாக்கோலை போட்டிருந்தால் அவரின் ஆவி மேலே போயிருக்காதுல. அந்த ஆவி தப்பிச்சிருக்கும்ல. அந்த தெர்மாக்கோல் ஐடியா செல்லூர் ராஜுவுக்கு அப்போவே வராம இப்ப வந்திருக்கேன்னு வருத்தமாக உள்ளது.

அம்மா

அம்மா

ஏன் என்றால் அந்த அம்மாவை நம்பியே தான் இருந்தேன் நான். அந்த நன்றியை சொன்னேன். பத்திரிகையாளர்களே இதை தலைப்பா போட்டு தொல்லை பண்ணிடாதீங்க. குழப்பிடாதீங்க என்றார் ராதாரவி.

English summary
Actor Radharavi has made fun of Sellur Raju's thermocol idea at the audio launch of Sangili Bungili kadhava thorae.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil